விசுவாசத்திற்கான அடிப்படை அஸ்திபாரம் THE FUNDEMENTAL FOUNDATION FOR FAITH 55-01-13 வில்லியம் மரியன் பிரான்ஹாம் விசுவாசத்திற்கான அடிப்படை அஸ்திபாரம் THE FUNDEMENTAL FOUNDATION FOR FAITH Chicago, Illinois, USA 55-01-13 1. நாம் தலைகளை தாழ்த்துவோம். எங்கள் பரலோகப்பிதாவே, இங்கே வந்து உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கும்படிக்கு கொடுத்த அருமையான சிலாக்கியத்திற்காக உமக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொலைந்து போன பரிதாபத்திற்குரிய பாவிகளாகிய எங்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு எங்கள் பாவங்களுக்காக பாடுபடவும், எங்கள் நோய்களை எடுத்து, சுமந்து தீர்த்து போடும்படிக்காகவும் உம்முடைய குமாரனை பூமிக்கு அனுப்பவேண்டும் என்று எங்களை தொடர்ந்து நினைவு கூர்ந்ததற்காக நாங்கள் உமக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அந்த எல்லாவற்றுக்கும் போதுமான பலியின் (all sufficient sacrifice) நன்மைகளை இன்றிரவு நாங்கள் அனுபவிப்பதற்காக நாங்கள் உமக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 2.இப்பொழுது, தேவனே, இன்றிரவு மக்களுடைய இருதயங்களில் விசேஷித்த வகையில் இடைபடும். நாங்கள் விசுவாசிக்கவேண்டும் என்பதற்காக அல்ல ஆனால் அவிசுவாசிகள் விசுவாசிக்கத் தக்கதாக ஏதோ ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அதை அளியும், கர்த்தாவே. நாங்கள் இந்த இடத்தை விட்டு கடந்துபோகும் போது எம்மாவுக்கு போனவர்கள் கூறினது போன்று நம்முடைய இருதயம் நமக்குள் கொழுந்துவிட்டு எரியவில்லையா? என்று நாங்களும் சொல்லட்டும். இன்றிரவு நாங்கள் உம்மை துதிக்கும்படிக்கு, நீர் எங்களுக்கு விசேஷித்த காரியத்தை செய்திடும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். இங்கே இன்றிரவு இந்த பிரசங்க பீடத்திலிருந்து, இங்கிருக்கும் இந்த அன்பான கூட்ட மக்களிடத்தில் பேசுவது என்பது ஒரு சிலாக்கியமாயிருக்கிறது. நாம் ஒன்று கூடி வருவதனால், நிச்சயமாக நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், நான் உள்ளே அழைத்துவரப்பட்டு, ஊழியக்காரர்களின் வேத வாசிப்பு அறைக்குள் நுழையும்போது, என்னுடைய அன்பான சகோதரன் எக்பர்க் (Ekberg) "அவருடைய மகிமையில் இருந்து" என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல். அப்பொழுது அவர் இங்கே இருந்தார் என்று நான் அறிவேன். நாங்கள் ஒருவருக்கொருவர் சில சந்தோஷமான நேரங்களை செலவிட்டிருக்கிறோம் மற்றும் சகோதரன் எக்பர்க் மிகவும் நலமுடனும், ஆரோக்கியத்துடனும் நன்றாக இருப்பதை பார்த்து நான் சந்தோஷப்படுகிறேன். தேவன் அவரை ஆசீர்வதிப்பாராக. 3.இப்பொழுது, நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதபடிக்கு, நான் ஒவ்வொரு இரவும் எவ்வளவு துரிதமாக வார்த்தைக்கு போக முடியுமோ அவ்வளவு துரிதமாக போகும்படிக்கு நான் முயற்சிப்பேன், ஏனெனில் உங்களோடு கூட இங்கே இந்த மக்களுடன் சிக்காகோவில் எவ்வளவு நாட்கள் இருக்கப்போகிறோம் என்று எங்களுக்குத் தெரியாது. அது கொஞ்ச நாட்களுக்குத்தான் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏற்கனவே நேற்று இரவு நான் அறிவித்தபடி, நாம் துரிதமாக போக விரும்பவில்லை. உணர்ச்சிவசப்பட வேண்டாம், பொறுமையுடன் காத்திருங்கள்.தேவனுக்கு வாய்ப்பைக் கொடுங்கள். உங்கள் நேரத்தை அர்ப்பணியுங்கள். ஒரு காரியத்திற்காக உங்களுக்கு ஜெபம் செய்யப்பட்ட பின்னர், ஏதோ காரியம் உங்களுக்கு நேரிடுமானால், அதை முற்றிலும் அலசிப்பார்த்து உங்களுக்கு உதவுவதற்க்கு நாங்கள் இங்கே இருக்கிறோம். பின்னர் சில சமயங்களில் மக்களுக்கு ஒரு சிறிய விசுவாச குறைபாடு அல்லது ஏதோ காரியம் நிகழும்போது, அல்லது அவிசுவாசிகள் மத்தியில் பிடிக்கப்பட்டு, அல்லது  தவறான கூட்டத்தார் மத்தியில் பிடிபடும்போது, அல்லது இன்னும் ஏதோ அப்படிப்பட்ட காரியம் நிகழும்போது அல்லது வெறுமெனே... விசுவாசத்தின் கிரியை. அதில் அவர் நல்லவராகவே இருக்கிறார். எனவே இந்த வேளைக்கேற்ற வார்த்தையை பேச தேவன் நமக்கு உதவி செய்யும்படிக்கு அவரிடத்தில் நாம் ஜெபிப்போம். 4.இப்பொழுது, இங்கிருக்கும் நம்முடைய அன்பான மேய்ப்பர், சகோதரன் ஜோசப் வருகிற ஞாயிறு அன்றும் மற்றும் அடுத்த வாரத்திலும் உயர்நிலை பள்ளியில் நடக்கும் கூட்டத்திற்காக நாம் செல்கிறோம் என்று கூறியிருந்தார். அதற்காக நாம் சந்தோஷப்படுகிறோம். தேவன் தாமே அங்கே நம்மை ஆசீர்வதித்து, அவருடைய மகிமைக்காக அவருடைய இராஜ்ஜியத்தின் சிறந்ததை கொடுப்பாராக. இப்பொழுது பரிசுத்த யோவான் 15-ம் அதிகாரம் 7-ம் வசனத்தை வாசிப்போம். நான் அந்த வேதவசனத்தை வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும். மறுபடியும் இதே பரிசுத்த யோவான் புத்தகத்தில் 14:12 வார்த்தைகளை வாசிப்போம். மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். 5.இந்த இரவு "விசுவாசத்திற்கான அடிப்படை அஸ்திபாரம்" என்ற சிறிய தலைப்பில் பேச விரும்புகிறேன். இவ்வகையான கூட்டங்களுக்கு வருவதற்கு அதிகமான ஜெபம் அவசியமாயிருக்கிறது. மேலும் இதற்கு நேர அர்ப்பணிப்பும், கர்த்தராகிய இயேசுவினிடத்தில் நம்மை அர்ப்பணிப்பதும் அவசியமாயிருக்கிறது. சாலையின் முடிவில் என் வாழ்க்கையானது முழுவதும் முடிவடைந்து, இங்கே இந்த ஜீவியத்தில் நான் சந்தித்த மக்கள் முன்பாக நான் வந்து நிற்கும்போது, நீங்கள் இதனுடைய அர்த்தம் என்னவென்றும், அவ்விதமான விஷயங்களில் பரிசுத்த ஆவியானவரின் செய்கை எப்படியாக நம்முடன் இடைப்பட்டதென்றும், அதன் அவசியம் என்னவென்றும் உணர்ந்துகொள்வீர்கள். அதை இப்பொழுது விவரித்து கூற முடியாது. நீங்கள் முற்றிலும் விசுவாசத்தினால் கிரியை செய்ய வேண்டியதாயிருக்கிறது. அப்படித்தான் நான் அதை பெற்றுக் கொள்கிறேன். அதை என்னால் விவரித்து சொல்ல முடியாது. அதை வெறுமெனே நான் விசுவாசிக்க வேண்டியதாயிருக்கிறது. அதை அவர் கொடுக்கும்போது; அதை அப்படியே நான் பெற்றுக் கொண்டு,அவ்வழியிலேயே அதை வளரும்படி விட்டுவிடுகிறேன். அதை அவ்விதமாக செய்வது அவருடைய வழியாய் இருக்கிறது. 6.இப்பொழுது, அநேகர் இப்படியாக "சரி, எனக்கு மட்டும் விசுவாசம் இருந்தா" என்று கூறுவதை கேட்டிருக்கிறோம். விசுவாசம் என்பது நீண்ட, தொடர் ஜெபகூட்டம் நடத்துவதால் வரும் என்று அர்த்தம் கிடையாது. நீங்கள் நீண்ட உபவாசம் இருப்பதாலும் விசுவாசம் வரும் என்று அர்த்தம் கிடையாது. விசுவாசம் என்பது நமக்கு தெரியாமலே (Unconscious) நமக்குள் இருக்கிறது. உனக்குள் இருக்கும் உன் அசலான விசுவாசத்தை நீ அறியாமல் இருக்கிறாய். உனக்குள் நீ பெற்றிருக்கும் விசுவாசத்தை நீ அறியாமலிருக்கிறாய். அது உனக்கு தெரியாமலேயே உனக்குள் இருக்கிறது. இயேசு இவ்விதமாக, 'எனக்கு காற்றை நிறுத்தவும் அல்லது அலைகளை அமைதிப்படுத்தவும் அல்லது லாசருவை உயிரோடே எழுப்பவும் கூடிய போதுமான விசுவாசம் என்னிடத்தில் இருக்கிறதா' என்று தன்னுடைய விசுவாசத்தை குறித்து சந்தேகப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அவர் தன்னுடைய விசுவாசத்தை குறித்து ஒருபோதும் கேள்வி எழுப்பினது கிடையாது. எனவே, முதலாவது நாம் விசுவாசத்தை பெற்றுக் கொள்வதற்க்கு முன்னர், நாம் விசுவாசத்திற்கான அஸ்திபாரத்தை பெற்றாக வேண்டும். அதற்கு பின்னாக ஏதோ காரியம் இருந்தாக வேண்டும். 7.ஒரு மனுஷன் தன் வாழ்க்கைத் துணையை தெரிந்து கொள்ளும்போது, பொதுவாக அவன், அவள் எந்த குடும்பத்தை சேர்ந்தவள் என்றும், அவளுடைய பின்னனி என்னவென்றும் இன்னும் அதுபோன்று அவளுடைய வாழ்க்கையைப் பற்றி விசாரிப்பான். அடிப்படையான ஒன்றை அதுபோல் ஏதோ ஒன்றை நாம் பெற்றிருக்க வேண்டும். தான் மணமுடிக்க இருக்கிற அவளைப் பற்றி அவளிடத்தில் கேட்க வேண்டும். எனவே அவளுடைய வார்த்தையை, அந்த ஒரு காரியத்தைத்தான் ஆதாரமாக அவன் எடுத்துக் கொள்ளமுடியும். அதைத் தான் அவன் எடுத்துக் கொள்ளமுடியும், அவளும் அவனுடைய வார்த்தையைத் தான் ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியும். அதைத் தவிர வேறு வழியில்லை. அதை அந்தவிதமாக தேவன் வைத்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அது நாம் கிறிஸ்துவை மணவாளனாக அல்லது அவர் நம்மை மணவாட்டியாக தெரிந்துகொள்வதைப் போல், ஒரு மனிதனும் தன் மனைவியை வார்த்தையில் ஆதாரப்படுத்தி தெரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது. இப்பொழுது, மொத்தத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்? நாம் எப்படி இங்கே வந்தோம்? நாம் இங்கே எதற்காக இருக்கிறோம்? அந்த விதமாக நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? நாம் மானிடர்களாய் இருக்கிறோம் மற்றும் அப்படி நம்மை மானிடர்களாய் மாற்றியது எது? இந்த பூமியில் நம்மை மானிடர்களாக மற்ற காரியத்தினிடத்திலிருந்து வேறுபடுத்தி வைத்தது எது? 8.ஒரு மனிதனுடைய நிலைமை என்னவாயிருந்தாலும், அவன் எவ்வளவு பாவியாயிருந்தாலும், அவன் தேவனைவிட்டு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், இன்னும் அவன் ஒரு தேவனுடைய குமாரனாகவே இருக்கிறான். அவன் விழுந்துபோன குமாரனாயிருந்தாலும், அவன் தேவனுடைய குமாரன்தான். தேவன், அவனை சிருஷ்டித்தார். தேவனே அவனை உண்டாக்கினவர். அவனை அவர் ஒரு கிரயத்தைக் கொண்டு (Price) வாங்கியிருக்கிறார். ஒருவேளை அதற்கு அவன் தன்னை ஒப்புரவாக்கிக் கொள்ளாமலிருக்கலாம். அதை அவன் ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். ஒருவேளை அது அவனுக்கு எந்த நன்மையும் செய்யாமல் இருக்கலாம். இருப்பினும் அவன் ஒரு தேவனுடைய குமாரனாகவும், அவள் ஒரு தேவனுடைய குமாரத்தியாகவும் இருக்கிறாள். எதற்காக தேவன் மனிதனை இங்கே வைத்திருக்கிறார்? இப்பொழுது நம்மால் இந்த எண்ணத்தின் மீது அதிக நேரம் செலவிடலாம், ஆனால் நாம் அதை செய்யமுடியாது. இன்றிரவு இங்கே அதைக் குறித்ததான அடிப்படை காரியத்தை நாம் பார்க்கப் போகிறோம். அதன் பிறகு நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபத்தை ஏறெடுப்போம். ஏனெனில், ஏற்கனவே ஊழியக்காரர்கள் பேசியும், இன்னும் மற்ற காரியங்களுக்கும் நேரத்தை எடுத்துக் கொண்டார்கள். எனவே, தேவன் ஆதியில் மனிதனை உண்டாக்கினபோது, அவனை பூமியிலிருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக வைத்தார். பூமியின் மேல் இருக்கும் ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்தக்கூடிய அதிகார வரம்பை அவனுக்கு கொடுத்தார். அவன் மிருக ஜீவன்களை கட்டுப்படுத்தினான். அவன் பறவைகளையும், கடலின் மச்சங்களையும் (மீன்கள்) கட்டுப்படுத்தினான். அவன் தாவர ஜீவன்களை கட்டுப்படுத்தினான். அவன் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தினான். 9.மனிதன் பூமியின் மீது இரண்டாந்தரமான தேவனாக (Secondary) இருக்கும்படிக்கு உருவாக்கப்பட்டான். பூமியில் உள்ள எல்லா தனிமங்களையும், எல்லா காரியங்களையும் கட்டுப்படுத்தும்படிக்கு மனிதனுக்கு வல்லமை கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்டவன் தான் ஆதாம். ஆதாமுக்கு இப்படிப்பட்ட பெரிய வல்லமைகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவனுக்கு வல்லமை கொடுக்கப்பட்டு அந்நிலையில் இருக்கும் போதுதான், அவன் வீழ்ந்தான். ஆதாம் காற்றினிடத்தில் பேச, அது நிற்கும். அவன் மரத்தைப் பார்த்து பேச, அது அவனுக்கு கீழ்படியும். அவனால் தண்ணீர்களிடத்தில் பேச முடியும், அது எப்படிப்பட்டதாய் இருந்தாலும்,அதனிடத்தில் அவனால் பேச முடியும். சகலமும் அவனுக்கு கீழ்படிந்தன. எனவே, அதுதான் மனிதனுடைய ஆரம்பநிலை. அவ்விதமாகத்தான் தேவன் அவனுக்கு பூமியின் மீது இருக்கும் எல்லாவற்றின் மேலும் வல்லமையை கொடுத்திருந்தார். எனவே வீழ்ச்சியின் மூலமாக, அவன் பிதாவினிடத்தில் கொண்டிருந்த உறவையும், நட்பையும், ஐக்கியத்தையும் இழந்து போனபிறகு அவன் இருந்த உண்மையான நிலையை நினைவிழந்து போனான். அதன் பிறகு அதை அவன் இழந்துபோனான். அல்லாமல் அவனுடைய எல்லா பெரிய வாய்க்கால்களும் அடைக்கப்பட்டு, அவனால் அவனுடைய வல்லமையை உபயோகிக்க முடியாமல் போனது. இப்பொழுது, ஆதாம் தேவனுக்குள் என்னவாக இருந்தானோ, அந்த நிலைமைக்கு கிறிஸ்து நம்மை மறுபடியும் மீட்டுக்கொண்டார். எனவே, ஒன்றை அதினுடைய மூல நிலைக்கு மீண்டும் மீட்டுக்கொண்டு வருபவர்தான் மீட்பவர். 10.ஆதாம் நோய்வாய்பட முடியாது. ஆதாம் மரிக்கவும் முடியாது. அவனுக்கு ஒரு கவலையும் இல்லை. அவனுக்கு இருதயவலி இல்லை, அவனுக்கு பயமும் இல்லை. அவன் பிதாவினுடைய கரங்களை பிடித்து தவழ்ந்து ஏறும் ஒரு குழந்தையைப் போல் இருந்தான். எல்லாமே அவனுடையதாய் இருந்தது. அவன் எதையெல்லாம் கேட்டானோ, ஆம், அதை அவன் பெற்றுக் கொண்டான். ஒவ்வொன்றும் அவனுக்கு கீழ்படிந்தது, ஏனெனில் அவன் தேவனுடைய பிள்ளையாக இருந்தான், பிள்ளையானவன் எல்லாவற்றிற்கும் சுதந்தரவாளியாய் (வாரிசாக) இருக்கிறான். எனவே, மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்ந்தபோது, இதையெல்லாம் அவன் இழந்துபோனான். ஆகவே அவன் வீழ்ச்சியினால் எதை இழந்து போனானோ, அதை மீட்கும்படிக்கு கிறிஸ்து, நம்முடைய மீட்பரானார். கிறிஸ்து நம்மை எதற்காக மீட்டார் என்று எப்பொழுதாவது சற்று நிறுத்தி சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? அவர் நமக்கு முடிவில்லா ஜீவனை கொடுத்திருக்கிறார். நாம் அவருடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கும்படிக்கு தேவனுடைய நித்திய ஐக்கியத்திற்கும், உறவிற்கும் திரும்ப கொண்டுவந்து, ஆதாம் எதையெல்லாம் வீழ்ச்சியினால் இழந்து போனானோ அதையெல்லாம் அவர் திரும்ப அளித்தார். 11.இப்பொழுது, காரியம் என்னவெனில், அவர் மனிதனை இந்த நிலைக்கு திரும்பவும் கொண்டு வரும்வரைக்கும், வீழ்ச்சியில் இருந்த மனிதன், பிதாவானவர் தன்னை பூமியில் எதை செய்யும்படிக்கு வைத்தாரோ அதை அவன் மறந்துபோயிருந்தான். இன்னொரு வார்த்தைகளில் சொல்லப் போனால் நம்முடைய மூளையில் இருக்கும் எல்லா குழாய் அமைப்புகள், வெளியேற்றுதிறப்புகள், (outlet), விசுவாசம் இவையாவும் வியாபார அலுவல்களாலும், வீட்டு வாழ்க்கை முறையாலும், குடும்பம் சார்ந்த காரியங்களாலும் அடைபட்டு போனது. அவர் மனிதனுக்காக கொடுத்த வாய்க்கால்களை (Channels) தேவனால் பயன்படுத்த முடியாத அளவுக்கு அது அடைபட்டு போயிருந்தது. எனவே, தேவன் மனிதனுடைய சரீரத்தை உண்டாக்கினபோது; பல், நாக்கு, கண்கள், மூக்கு போன்ற ஒவ்வொரு சிறிய பாகமும் அதினுடைய வேலையை செய்யும் படிக்கு அதினதின் ஸ்தானத்தில் இருந்தன. மனிதனை ஜீவிக்க செய்யும்படிக்கு ஒவ்வொன்றும் அதினதின் ஸ்தானத்தில் கச்சிதமாக இருக்கும்படிக்கு தேவன் செய்தார். எனவே தேவன் மனிதனை, அதாவது மனிதனுடைய சரீரத்தை அவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்திருப்பாரானால்? சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்தை எவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்து, ஒழுங்கில் வைத்திருப்பார். 12.தேவன் மனிதனுடைய சரீரத்தை அவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்திருக்கும் பட்சத்தில், நிச்சயமாக சபையாகிய அவருடைய குமாரனின் சரீரத்தையும் வடிவமைத்திருப்பார். நாமெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் வீற்றிருக்கவும், வெளியேற்று திறப்புகளான ஆவியின் வரங்களாகிய தீர்க்கதரிசனம், ஞானம், அறிவு, சுகம்பெறுதல் ஆகியன மூலம் தேவனுடைய இயற்கைக்கு மேம்பட்ட செயல்களை பெற்றிருக்கும்படி நம்மை வடிவமைத்திருக்கிறார். தேவன் தன்னுடைய வல்லமையையும், வெளிப்பாட்டையும் தன்னுடைய மக்களுக்கு கொடுக்கும்படி இந்த எல்லா வெவ்வேறு வரங்களும் வெளியேற்று திறப்புகளாக இருக்கிறது. நாமெல்லாரும் தனித்தனி நபர்களாக இருப்பதால் அல்ல, ஆனால் நாமெல்லாரும் ஒரு ஒட்டுமொத்த கூட்டமாக இருக்கும் போது தான் ஒரு பெரிய விசுவாசிகள் கொண்ட சரீரமாய் இருக்கிறோம். எனவே சரீரமாகிய, இந்த காணக்கூடாத கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தில் நாம் எப்படி இணைக்கப்படுகிறோம்? எப்படியெனில் ஒரே ஆவியினால் நாமெல்லாரும் இந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுவதால் நாம் இணைக்கப்படுகிறோம். எனவே, பாவ மரண பிரமாணங்கள் மூலம் பாவம் மரணம் வாங்கின ஒவ்வொன்றையும் சாத்தான் இயக்குகிறான். ஆகவே சாத்தான் ஒரு புற்றுநோயை அனுப்பும்போது, மனிதன் அதை அங்கீகரித்து பெற்றுக் கொள்கிறான். சாத்தான் மனவேதனையை அனுப்புகிறான், அதை நாம் அங்கீகரித்துப் பெற்றுக் கொள்கிறோம். 13.எனவே, சாத்தான் தன்னுடைய வல்லமையின் மூலம் தன் பிரமாணங்களை மனிதனில் கிரியை செய்ய வைக்கமுடியுமானால், அதைக் காட்டிலும் தேவன் எவ்வளவாக தன் வல்லமையின் மூலம் தன்னுடைய பிரமாணங்களை மனிதனுக்குள்ளாக கிரியை செய்விக்க முடியும்? சாத்தான் தன்னுடைய பிரமாணங்கள் நம்பும்படிக்கு உறுதிப்படுத்தி, ஒப்புக்கொள்ள செய்வானென்றால், அதைக் காட்டிலும் தேவன் எவ்வளவாக அவருடைய பிரமாணங்களாகிய தெய்வீக சுகமளித்தல், வெளிப்பாடு, வல்லமை, வரங்கள், பரிசுத்த ஆவியின் பிரதியட்சமாகுதல்களை தன்னுடைய மக்கள் மத்தியில் அடையாளங்களாக கண்டு கொள்ளச் செய்வார். பாவம், மரணம் என்னும் பிரமாணம் மக்களிடத்தில் கிரியை செய்கிறது, ஆனால் கிறிஸ்துவின் சுதந்திர பிரமாணம், நம்மண்டையில் வந்து நம்மை அப்படிப்பட்ட காரியங்களிலிருந்து விடுதலையாக்கி இருக்கிறது. ஆகவே இதை நான் என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். எப்படியெனில் இப்படிப்பட்ட காரியங்களை மக்கள் இணங்கண்டு கொள்ளக்கூடிய காலத்திற்கு நெருங்கி வருகிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் பெற்றுக் கொண்ட பெரிய அளவிலான வீணான தத்துவம்,போதனைகள் இன்னும் அது போன்ற காரியங்கள்; மனித எண்ணத்தில் இந்த, அந்த காரியங்களை குறித்ததான புரட்சிகரமான சிந்தனைகளுக்கு வழிநடத்தி, தேவனுடைய வார்த்தையிலிருந்து விலக்கிப்போட்டது. நான் உங்களுக்கு ஏற்கனவே கூறினது போல் விசுவாசமானது உபவாசம் இருப்பதினால் வராது. விசுவாசம் ஜெபிப்பதினாலும் அல்லது புத்தகம் வாசிப்பதினாலும் வராது. உபவாசம் இருப்பது, ஜெபிப்பது, புத்தகம் வாசிப்பது இவையெல்லாம் நல்லதுதான். ஆனால் மனித இருதயத்தில் எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடம் இல்லாத அளவுக்கு நிலைவரப்பட்ட ஒரு காரியத்தினால் விசுவாசம் வருகிறது. நீ இன்றிரவு சபைக்கு வந்திருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக உன்னிடத்தில் சொல்லக்கூடிய... நீ வீட்டுக்கு வந்தவுடன், உன் மனைவியினிடத்தில் நான் கூட்டம் முடிந்து திரும்ப வீட்டுக்கு வருவேன் என்று சொல்கிறாய், உன்னை அறியாமலேயே நீ அதை செய்கிறாய். கூட்டம் முடிந்து வெளியே போகிறீர்கள், உங்கள் காரில் ஏறுகிறீர்கள், வீட்டை அடைகிறீர்கள். எனவே விசுவாசம் என்ற ஒன்று இல்லாதபட்சத்தில், அதை நீங்கள் செய்யமாட்டீர்கள். உட்கார்ந்திருக்கிற இடத்திலிருந்து நீங்கள் எழுந்திருப்பீங்க என்ற விசுவாசம் உங்களுக்கு இல்லாத பட்சத்தில்,நீங்கள் எங்கே உட்கார்ந்திருக்கிறீர்களோ அங்கிருந்து உங்களால் நகரகூட முடியாது. ஆனால் நீங்கள் அதை அடிக்கடி செய்து, அது உங்களுக்கு சர்வசாதாரணமான காரியமாகி, அந்த பிரமாணங்களுக்கு (சட்டத்துக்கு) அவ்வளவு இயற்கையானதாகிப் போகிறீர்கள். 14.இப்பொழுது, நாம் தேவனுக்கும், அவருடைய சித்தத்துக்கும் நம்மை முழுமையாக சரணடையச் செய்து, நம்முடைய சொந்த எண்ணங்களை தொலைத்து, கிறிஸ்துவின் சிந்தையை நமக்குள் இருக்கும்படிக்கு அனுமதிப்போமானால், ஆவியானவரின் அதே கிரியைகளும், அந்த காரியங்களும், இயற்கையில் காரியங்கள் எப்படி நடப்பிக்கப்படுகிறதோ அவ்விதமே நம் மூலமாகவும் அவை செய்யப்படும். காரணம் இயற்கையின் காரியங்களை கட்டுப்படுத்தவும், ஆண்டு கொள்ளவும், தேவனைத் துதிக்கவும், தேவனுக்காக ஜீவிக்கவேண்டும் என்ற அந்த நோக்கத்திற்காகவே முதலாவது நாம் சிருஷ்டிக்கப்பட்டோம். எனவே, இயேசு, நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்கு கொடுக்கப்படும் "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்," என்று கூறியிருக்கிறார். இப்பொழுது, பிதாவும் அவருடைய வார்த்தையும் பிரிக்கப்பட முடியாது, ஏனெனில் வார்த்தை அவருடைய குமாரனாயிருக்கிறது. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நம்மத்தியில் வாசம் செய்தது". தேவனையும் அவருடைய வார்த்தையையும் பிரிக்கமுடியாது. அவருடைய வார்த்தையை பெறாமல் நீங்கள் தேவனை பெற்றுக் கொள்ளமுடியாது, எனவே நீங்கள் வார்த்தையை பெற்றிருக்கும்போது, நீங்கள் தேவனை பெற்றிருக்கிறீர்கள். 15.நீங்கள் சற்று பின்னாக போய் பார்க்கவேண்டுமானால், அதாவது வரலாறு துவங்கின பிறகு பார்ப்பீர்களானால், உங்களால் வார்த்தையை பார்க்கமுடியும். ஆதியிலே வார்த்தை இருந்தது. ஆனால் வார்த்தை என்றால் என்ன? வார்த்தை என்பது ஒருவருக்குள் இருக்கும் எண்ணமானது (thought) பேசப்பட்டு, தெளிவாக பார்க்கக்கூடிய வெளிப்படையான காரியமாய் இருக்கிறது. தேவன், முதலாவது ஒரு எண்ணத்தை யோசித்து, பேசும்போது, அதுவே ஒரு வார்த்தையாகி, அந்த வார்த்தை ஒரு பொருளாக மாறுகிறது. எனவே தேவன் தன் வார்த்தையில் பேசின ஒவ்வொன்றும் சரியான வழிமுறையில் (right channel) ஏற்றுக் கொள்ளப்படும்போது, அந்த வார்த்தைக்கு பின்னாக இருக்கிற எந்த வாக்குத்தத்தத்தையும் அது நிறைவேற்றும். தேவன் அதைச் செய்வார். அதைச் செய்ய அவர் கடமைப்பட்டிருக்கிறார். எனவே, ''நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் இருக்கும்போது". அப்பொழுது நீங்கள் தேவனையும் அவருடைய வார்த்தையையும் உங்களுக்குள் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் தேவனை எப்படி விசுவாசிக்கிறீர்களோ, அதேபோல் அவருடைய வார்த்தையையும் விசுவாசிக்கிறீர்கள். ஏனெனில் அது தேவனாகவும் மற்றும் அதிலிருந்து பிரிக்க முடியாததுமாய் இருக்கிறது. எனவே நீங்கள் தேவனுடைய வார்த்தையை உங்களுக்குள் பெற்றிருக்கும் போது, நீங்கள் தேவனுடைய ஜீவனை உங்களுக்குள் பெற்றிருக்கிறீர்கள். அது உங்களுக்குள் நீங்கள் தேவனை பெற்றிருப்பதை காட்டுகிறது. அதன் பின்னர் உங்களுக்குள்ளாக இருந்து பேசப்படும் எந்த தேவனுடைய வார்த்தையும், அது தேவன் பேசினதற்கு சமமாக இருந்து, அது நிச்சயமாக நிறைவேறியே தீரும். 16.இயேசு, ''என் நாமத்தினால் நீங்கள் பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ, அதை நான் உங்களுக்கு செய்வேன்", என்றார். நீங்கள் எப்பொழுதாவது அது என்னவென்று உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் தேவனுக்கு முன்பாக, இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கப் போகும்போது, அது இயேசுவே ஜெபிப்பதற்கு சமம் என்று எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அதற்கு பிறகு ஜெபிப்பது நான் அல்ல. நான் அவருடைய நாமத்தினால் வரும்போது, அதை அவர் அங்கீகரிக்கிறார். ஏனெனில் இயேசு, ''என் நாமத்தினால் நீங்கள் பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ, அதை நான் உங்களுக்கு செய்வேன்", என்றார். எனவே அதன்பின் பிதாவண்டையில் நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க போகும்போது, அப்பொழுது ஜெபிப்பது, நான் அல்ல; அது இயேசுவே ஜெபிக்கிறதாய் இருக்கிறது. அது அவருடைய ஆவி என் மூலமாய் ஜெபிப்பதாய் இருக்கும். பின்னர் நான் கேட்டுக் கொண்டது எதுவோ அதை நான் பெற்றே ஆக வேண்டும். காரணம் அதை அவர் கூறியிருக்கிறார் மற்றும் அது தேவனுடைய வார்த்தையாகவும் இருக்கிறது. அது எதை கூறியிருக்கிறதோ அதைத்தான் அது உற்பத்தி செய்யும், அதைத் தவிர வேறொன்றையும் அது நிறைவேற்றாது. 17.நாம் தேவனிடத்தில் எதைக் கேட்கிறோமோ அதைப் பெற்றுக் கொள்வோம் என்ற திடநம்பிக்கை நமக்கு தேவனிடத்தில் உண்டு. ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார் மற்றும் தன் வார்த்தையில் பின்வாங்கவும் மாட்டார். அவர் தான் கூறின வார்த்தையில் நிற்க வேண்டியதாயிருக்கிறது. எனவே, ''நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குக் கொடுக்கப்படும்". அது எவ்வளவு எளிமையாக இருக்கிறதல்லவா? விசுவாசம் சிருஷ்டிக்கிறதாயிருக்கிறது. நாம் அந்த நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டோம். ஆனால் வீழ்ச்சியின் மூலம், ஆம், நாம் அதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டோம், மீண்டும் மீட்கப்படுதலினால் நாம் அந்த நிலைக்கு கொண்டுவரப்பட்டோம். இன்றைக்கு மனித வர்க்கத்தை, அவர்கள் ஆரம்பத்தில் இருந்த மேம்பட்ட மற்றும் அனைத்தையும் கட்டுப்படுத்துகிற நிலையில் இருக்கவிடாமல் தடைபண்ணுகிற ஒரு காரியம் இருக்குமானால் அது மனிதனுக்குள்ளாக தேவனுடைய வல்லமை வெளி வரும்படிக்கு வைக்கப்பட்டிருக்கும் குழாய்களின் வெளிச் செல்லும் வழிகள் (Out lets) அடைபட்டிருப்பதே (clogged up) காரணமாகும். 18.இதை நான் பயபக்தியுடன் கூறுகிறேன். சில சமயங்களில் உங்களுடைய விசுவாச குழாய்களை வேதசாஸ்திரங்களும், சபை கோட்பாடுகளும் அடைத்துப் போட்டிருக்கும். அப்படிப்பட்ட காரியங்களெல்லாம் நடக்காது என்று உங்களுக்கு போதிக்கப்பட்டிருப்பதால் அது அடைக்கப்பட்டிருக்கிறது மற்றும் அந்த எண்ணமே அதினுடைய வழியில் அதை நிறைவேறவிடாமல் தடையை கொண்டு வருகிறது. இன்றிரவு இந்த கட்டிடமானது வெளிச்சத்தை பெற்றுக் கொள்ளும்படிக்கு மின்சாரத்தில் ஆற்றலை பெற்றிருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? மின்சாரம் அது ஒரு காணக்கூடாத சக்தியாக இருக்கிறது. பென்ஞமின் பிராங்க்ளின் முதலாவது அதை பெற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறையைக் கண்டுபிடித்து அதை கொண்டுவந்த போது, ''அதை நான் பெற்றுக் கொண்டேன்", என்று கூச்சலிட்டார். அவர் எதை கண்டுபிடித்தார் என்று அவருக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்றை அவர் பெற்றுக் கொண்டார். ஆனால் அவருக்கு பின்னர் வந்த எடிசன், அதைச் செயல்படும்படிச் செய்தார்;. இன்றைக்கு இங்கிருந்து உலகில் உள்ள எந்த இடத்திற்கும் தந்தியை (telegram) கம்பியில்லா தந்திமூலம் நம்மால் அனுப்பமுடியும். ஒரு மனிதனும் பார்க்கமுடியாத, காணக்கூடாத சக்தி அதை வான்வெளி மூலமாக கொண்டு செல்கிறது, அதை ஒரு கருவியால் மாத்திரமே காணமுடியும். ஏனெனில் நம்முடைய கண்களால் அதை பார்க்கக்கூடாத அளவுக்கு அதிவேகமாக அது போகும். சரியாக இப்பொழுதுகூட இங்கே தந்திகளை கொண்டுவரக் கூடிய ஒரு சக்தி இங்கே இருக்கிறது. 19.எனவே, தேவனுடைய பிரமாணங்களாகிய மின்சாரமும் இன்னும் மற்ற காரியங்களும் சரியான முறையில் கையாளப்படும் போது அப்படிப்பட்ட காரியங்களை அவை செய்யும் போது, விசுவாசத்தினால் மனித இருதயத்திற்குள் பாய்ந்தோடுகிற பரிசுத்த ஆவியின் வல்லமை எவ்வளவு மேன்மையான காரியங்களைச் செய்யும். இப்பொழுது அவர்களை விடுவிக்கும்படிக்கு தேவன் நமக்கு மின்சாரத்தை மட்டும் நமக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் இன்றைக்கு விசுவாசிகளுக்கு, பரிசுத்த ஆவியானவர் எதை வாக்களித்திருக்கிறார் என்று கவனியுங்கள். மற்றும் நாம் திரும்பி பார்க்கும்போது தேவன் மின்சாரத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அளித்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்கிறோம். விஞ்ஞானமானது ஆராய்ச்சி செய்து அதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் அநேக காரியங்களால் அடைபட்டு போயிருக்கிறோம். நம்மால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படியெனில், 'மருத்துவர் நான் சுகமடைய மாட்டேன் என்று கூறிவிட்டார்' என்று அதையே நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியாக அதை நீ நினைக்கும் வரைக்கும், நீ தேவனுடைய எண்ணத்தை நினைப்பதில்லை. ''ஆம், மருத்துவரும் நான் மரிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டார். எனவே நான் மரித்துவிடுவேன்" என்று நீ நினைப்பாயானால், உன்னால் சுகத்தை பெற்றுக் கொள்ளவே முடியாது. மருத்துவர்களுக்கு முழு மரியாதை கொடுக்கிறோம், ஆனால் அவர்களுடைய சிறந்த அறிவு அவ்வளவுதான். 20.அவர் (மருத்துவர்) 'நீ மரித்துவிடுவாய்' என்று கூறும்போது, அதை மனித பார்வையில் பார்க்கும்போது, அதை அப்படியே நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அதை பார்க்கும்போது, நான் அதை விசுவாசிக்க மாட்டேன். அது உண்மையே. காரணம் அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். எப்படியெனில் நான் அவருடைய நாமத்தினால் பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை எனக்கு தந்தருள்வார் என்றும் அது உண்மை என்றும் நான் விசுவாசிக்கிறேன். எனவே, தேவன் அந்த சிறிய வாய்காலை (பாதையை) சுத்தம்செய்து அந்த சக்தியை அவ்விடத்திற்கு ஓடச்செய்யும் போது, அப்பொழுது நிச்சயம் ஏதோ காரியம் அங்கே நடந்தே தீரும். எப்படியாக என் சரீரத்திலிருக்கும் ஒவ்வொரு அங்கத்தையும் அது இயங்கச் செய்து ஜீவனை கொண்டுவருகிறதோ, அப்படியே கிறிஸ்துவின் சரீரத்திலிருக்கும் ஒவ்வொரு அங்கத்தையும் அது சரியாக இயங்கச் செய்து அதை பெற்றுக் கொள்ளும்படி செய்யும். நான் என்ன சொல்கிறேன் என்று நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? 21.சிலரை போதகர்களாகவும், அப்போஸ்தலர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும், சுகமளிக்கும் வரங்களையுடைய வர்களாகவும், அற்புதங்களை செய்கிறவர்களாகவும், பாஷைகளை பேசுகிறவர்களாகவும், வியாக்கியானம் செய்கிறவர்களாகவும், இன்னும் அது போன்றவர்களை இந்த சபையில் வைத்திருக்கிறார். இந்த காணக்கூடாத பெரிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கும் இவையாவும் பூமியின் மீதாக நகர்ந்து கொண்டிருக்கிறது. மற்றும் நான் விசுவாசிக்கிறேன் என்றாவது ஒரு நாளில் அது இப்பொழுதே மிகவும் சமீபத்தில்இருக்கிறது... எப்படியெனில் இன்றிரவு இங்கிருக்கும் இந்த விளக்கிற்கும் சாலைக்கு அப்பால் அங்கிருக்கும் அந்த விளக்கிற்கும் குறுக்கே அந்த சிறிய தொங்கல் கயிறு மூலமாக மின் கம்பியை அவன் ஓட விட்டிருக்கிறான். அது தான் காரியம். சரி, இப்பொழுது மின்சக்தியானது அந்த மின்கம்பி மூலமாக செலுத்தப்படும்போது, இங்கே எப்படி இந்த விளக்கு எரிகிறதோ அதேபோல் அங்கிருக்கும் அந்த விளக்கையும் அது எரியச்செய்யும். இப்பொழுது, நான் விசுவாசிக்கிறேன் பூமியிலிருக்கும் தேவனுடைய ஆவிக்குரிய சரீரத்தின் மின்கம்பியமைப்பானது... அதை நான் பயபக்தியுடன் மின் அமைவு செப்பனிடுபவருக்கு (electrician) கூறுகிறேன். தண்ணீர் குழாய் அமைப்புகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, ஆனால் தண்ணீரை (ஞானஸ்நானத்தை) மட்டுமே கொண்டு அவர்களை இரட்சிக்கமுடியாது. அது சரி என்று உங்களுக்கு தெரியும். அப்படி வருவது ஒரு பாப்டிஸ்டுகாரர்களுக்கு அருமையானதாய் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. 22.எனவே அவருடைய சரீரமானது சரியான முறையில் மின்கம்பியமைப்பு செய்யப்பட்டு, பரலோகத்திலிருக்கிற பிதா அந்த பெரிய முக்கிய சுவிட்சை (Master switch) போடும்போது, நிச்சயமாக அங்கே ஏதோ காரியம் நிகழும். அது சரிதான். சரீரமானது... கட்டிடமானது சரியான விதத்தில் மின் கம்பி அமைப்பு செய்யப்பட்டிருந்தால்... அதுதாமே சரியாக போதிக்கப்பட்டு, நம்முடைய சரீரத்தில் இருக்கும் ஒவ்வொரு இழையும் (fiber) கிறிஸ்துவுக்குள்ளும் மற்றும் அவருடைய வார்த்தைக்குள்ளும் மரித்து போகுமானால்... எனவே உங்களிடத்தில் வேதசாஸ்திரம் சார்ந்த காரியமோ, உபதேசமோ, ஏதோ மூடநம்பிக்கையோ, ஏதோ அவிசுவாசமோ அல்லது அதை தடுக்கக்கூடிய ஏதோ காரியம் எங்கோ உங்களிடத்தில் இருக்குமானால், அப்பொழுது அந்த சக்தியானது உங்களுக்குள் பிரவாகித்து ஓட முடியாமல் போகும். ஆனால் நீங்கள் சரியான முறையில் மின்கம்பி அமைப்பு செய்யப்பட்ட ஒரு இடத்திற்கு வந்து, பிரதான மின்அமைவு செப்பனிடுபவரும் (Master Electrician) அதுசரியாக இருக்கிறது என்று கூறி அதை பரிசுத்த ஆவியினால் முத்திரை போட்டிருக்கும் போது, அதன் பின் செய்யவேண்டிய காரியம் ஒன்றே ஒன்றுதான், அது சுவிட்சை போட அங்கே விளக்கொளிகாட்சி தோன்றும். அது சரிதான். 23.நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. இன்றிரவு, நாம் நம்மை குறித்து வெட்கப்பட வேண்டியவர்களாய் இருக்கிறோம். நாம்உத்தமத்தோடும், தாழ்மையோடும் நம்முடைய அவிசுவாசத்தை தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு; இவ்விதமாய் இந்த ஜீவியத்தில் அவரை பிரதிநிதிப்படுத்தியதற்காக நாம் அவரிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் அவர் நம்மேல் சார்ந்திருக்கிறார். பழைய ஏற்பாட்டு ஜனங்கள் இப்படிப்பட்ட பிரசன்னத்தை பெற்றிருக்கவில்லை. நீங்களும் அதை அறியாமலிருக்கிறீர்கள். சில சமயங்களில் நீங்கள் எலியா, மோசே, இன்னும் மற்றவர்களை குறிப்பிடுகிறீர்கள். மோசே, எலியா இன்னும் அப்படிப்பட்டவர்கள் தேவனால் நியமிக்கப்பட்ட பெரிய மனிதர்கள், இருப்பினும் நீங்கள் பெற்றிருக்கிற சிலாக்கியத்தை அவர்கள் பெறவில்லை. அவர்கள் இப்படிப்பட்ட சிலாக்கியத்தை பெறவில்லை. கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும் அனைத்தையும் நீங்கள் பெற்று காரியங்களை நடப்பிப்பது போல அவர்களும் அவ்விதமே நடப்பிக்கும்படிக்கு வல்லமையானது அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. 24.ஏனெனில் அவர்கள் இந்நாளை முன்னமே கண்டு, கட்டித் தழுவி, விசுவாசித்து, அது வருவதற்கு முன்னமே அது அப்பொழுதே வரவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இப்பொழுதோ இந்நாட்களில் ஜீவிக்கிற நாம், அதைக்கண்டு அஞ்சுகிறோம். பாருங்கள், நாம் எப்பேற்பட்ட சிலாக்கியத்தை பெற்றிருக்கிறோம் என்று. எனவே சாத்தானுடைய சரீரமானது அவிசுவாசத்தினாலும், சந்தேகங்களினாலும், பயங்களினாலும் இயக்கப்படும்போது அது நோயை கொண்டு வரும். அது பேரழிவை கொண்டுவரும். அது எல்லாவிதமான கொடிய காரியங்களைக் கொண்டு வரும். எனவே மக்கள் அவிசுவாசித்து அவ்விதமான காரியங்களை (நோய்கள் மற்ற யாவும்) உற்பத்தி செய்வதற்கு பதிலாக, ஏன் அவர்கள் விசுவாசித்து, தேவனுடைய வல்லமையைக் கொண்டு இவ்விதமான (சுகமளித்தல் மற்ற நன்மைகளை) காரியங்களை பெற்று அவிசுவாசத்தினால் வரும் காரியங்களை சரி செய்யக் கூடாது? 25.அப்படியானால் கிறிஸ்து நம்மை எதற்காக மீட்டெடுத்தார்? நம்மை எதற்காக மீட்டார் என்று எப்பொழுதாவது சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? அவர் உங்களுக்கு பாவபரிகாரத்தை செய்யாமல், இப்பொழுது, ''இவர்களுக்கு இவ்வளவு பெரிய வல்லமைகளை கொடுப்பது அவசியமில்லை. இந்த மனிதனை ஒரு தேவ குமாரனாக ஆக்குவதும் அவசியமில்லை. அப்படி செய்வது அவர்களுக்கு அவசியமாயிராது. நான் அவனை அதை விசுவாசிக்க மாத்திரம் செய்து, அவனுடைய பெயரை பரலோக புத்தகத்தில் எழுதுவேன், அது காரியத்தை சரி செய்யும்", என்று கூறியிருக்கலாமே. ஆனால் நாமோ பரிசுத்த ஆவியின் வல்லமையைக் கொண்டு தேவனுடைய செய்கையை நடப்பிக்கும்படிக்கு நமக்கு அவர் இந்த மீட்பின் ஆசீர்வாதங்களை கொடுத்திருக்கிறார். பரிசுத்த யோவான் 15-ம் அதிகாரத்தில் அவர், ''நானே திராட்சை செடி, நீங்கள் அதின் கொடிகளாய் இருக்கிறீர்கள்", என்று கூறியிருக்கிறார். கனியானது திராட்சை செடிக்குள் இருந்தாலும், திராட்சை செடி கனியை கொடுக்க முடியாது என்று உங்களுக்கு தெரியுமா? எனவே கனியானது திராட்சை செடியிலிருந்து வரமுடியாது. அது கனியை கொடுக்கும்படிக்கு அதினிடத்தில் கிளை இருக்கவேண்டும். நீங்கள் தான் அவருடைய கிளைகளாய் இருக்கிறீர்கள். எனவே, திராட்சை செடி எவ்வளவுதான் தன்னிடத்தில் சக்தியை கொண்டிருந்தாலும், கிளையானது அந்த சக்தியை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் திராட்சை செடியால் கனியை உற்பத்திசெய்ய முடியாது. 26.இப்பொழுது, அவருடைய சரீரத்தின் ஒரு பாகமாய் நீங்கள் இருப்பதினால், அவருடைய ஆவியின் கனியை கொடுக்கும்படிக்கு உங்கள் மீது அவர் சார்ந்திருக்கிறார். எனவே அவர் உங்கள் மீது சார்ந்திருப்பதினால், இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு நமக்குள்ளாக வந்து, நமக்கு வல்லமையை கொடுத்து, நம்மை இந்த எல்லா பயங்களிலிருந்தும், சந்தேகங்களிலிருந்தும் விடுவிக்கும்படிக்கு நம்முடைய வாய்கால்களை திறந்து கொடுப்போமாக. அப்பொழுது எழுப்புதல் உண்டாகும். யாரோ ஒருவர், ''அப்படிப்பட்ட காரியங்களை செய்யும்படிக்கு அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே அந்த வல்லமை கொடுக்கப்பட்டிருக்கிறது" என்றார். நான் ஒரு வரலாற்று ஆசிரியர் (நிபுணர்) கிடையாது. ஆனால் சபை வரலாற்றை பற்றி அதிகமாக படித்திருக்கிறேன். முழு உலக வரலாற்றிலும் பரிசுத்த ஆவியானவரின் தாக்கம் சபையை அசைத்து, எழுப்புதலை உண்டாக்கி மகத்தான அடையாளங்களையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் பின்தொடரச் செய்யாமல் போனதாக ஒரு சமயத்தை கூட நான் பார்த்ததில்லை. தேவன் வியாதியஸ்தர்களை ஒவ்வொரு காலத்திலும் சுகப்படுத்தியிருக்கிறார். மேலும் மக்களும் சபைகளும் தங்களுடைய சுயத்தை விட்டுக் கொடுத்து, அவர்கள் ஜீவியத்தை பரிசுத்த ஆவியானவர் கட்டுக்குள்ளாக எடுத்துக் கொள்ளும்படி செய்வார்களானால் அதே சுகமளித்தலை அவர் ஒவ்வொரு காலத்திலும் செய்வார். 27.மார்டின் லூத்தர் தன்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவருக்கு ஜெபித்து, அவர் சுகத்தை பெற்றுக் கொண்டார். ஜான் வெஸ்லி வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்து இருநூற்று நாற்பது நோயாளிகள் சுகம் பெற்றது பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். ஒருமுறை அவர் குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்த போது அவருடைய குதிரை சுகவீனப்பட்டு நொண்ட ஆரம்பித்தது, அவரும் தலைவலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். தேவனோ அவருக்கும் அவர் குதிரைக்கும் எப்படியாக சுகத்தை கொடுத்தார். அதன் பிறகு குதிரையும் நொண்டுவதை நிறுத்திவிட்டது. அதை தொடர்ந்து வந்த மூடி (Moddy), சாங்கி (Sankey), ஃபின்னி (Finney) இவர்களின் நாட்களில் பரிசுத்த ஆவியின் தாக்கம் சபைகளின் ஊடாக அசைவாடின போது, அங்கே அடையாளங்களும், அற்புதங்களும் நிகழ்ந்தன. ஏன், ஒரு சமயம் ஒருவர் இப்படியாக சொன்னார். அது மூடி என்று நான் விசுவாசிக்கிறேன். மூடி சுகமளிக்கும் உபதேசத்தை போதிக்காத போதிலும், அவருடைய கூட்டத்தில் பரிசுத்த ஆவியானவர் அசைவாடின போது அநேக ஜனங்கள் சுகத்தை பெற்றுக் கொண்டனர். எனவே அவர் இப்படியாக கூறினார். அவருடைய கூட்டத்தில் அவ்வளவு சுகமளிக்கும் காரியம் நடந்ததினால், அவருடைய சபை பிரான்சில் உள்ள தலைமை தேவாலயத்துக்கு மக்கள் சுகத்தை பெற்றுக் கொள்வதற்கு வருவது போல ஆகிவிடுமோ என்று எண்ணினார். எனவே அநேக ஜனங்கள் சுகத்தை பெற்றுக் கொண்டது, எப்படியாக பரிசுத்த ஆவியானவர், தெய்வீக சுகமளித்தலைப் பற்றி போதிக்கப்படாத போதிலும், பரிசுத்த ஆவியானவர் தாமே அவர் சரியான... பெற்றுக் கொள்ளும் போது அதைச் செய்வார். அது சுகமளித்தலை உற்பத்தி பண்ணியே தீரும். 28.சுகமளிக்கும் ஜெபத்திற்கு கூட வரமுடியாமல், வெறுமெனே இங்கே உட்கார்ந்து பரிசுத்த ஆவிக்கு முற்றிலும் கீழ்படிந்து, வீட்டிற்கு திரும்பிச் சென்று, முழு சுகத்தை பெற்றுக் கொண்டு அதைக் கூட அறியாமலிருக்கும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். பரிசுத்த ஆவியானவரே சுகமளிப்பவராயிருக்கிறார். ஒவ்வொருவருடையஜீவியத்திற்கும் வல்லமையைக் கொடுத்து ஒவ்வொருவருக்கும் சுகத்தை அளிக்கும்படிக்கு இன்றிரவுபரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலுக்கு அடிப்படையானகாரியம் என்னவென்று பார்ப்போம். நாம் நீண்ட நேரம் பேசும்படிக்கு நமக்கு நேரம் போதாததால்,நாம் துரிதமாக முடிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். நாம் துரிதமாக முடித்தே ஆக வேண்டும். இப்பொழுது, ஏதோ காரியம் தவறாயிருக்கிறது. நீங்கள்ஒவ்வொரு சூழ்நிலையையும் உங்களுடைய கட்டுக்குள்ளாக வைக்கும்படிக்குதான் உங்களை தேவன்துவக்கத்தில் சிருஷ்டித்தார். அது தான் உங்களுடைய துவக்கம்; அது அதிகாரப்பூர்வமானது; அது தேவனுடையவார்த்தை. அங்கே எதுவுமே, எதுவுமே உங்களை மீறி நடக்காது. ஏனெனில் நீங்கள் தான் அதின் எஜமானர். அதற்காகத்தான் நீங்கள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறீர்கள். 29.அதன்பின் வீழ்ச்சியை தொடர்ந்து வந்த பாவம், அவர்களுடைய கண்களை குருடாக்கிப் போட்டது. ஆனால் அதன்பின் வந்த இயேசு, இப்பொழுது அதை நமக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறார். மற்றும் இந்த எல்லா தெய்வீக வாக்குத்தத்தங்களோடு கூட பிதாவானவர் உன்னை முன்னிருந்து வழிநடத்தவும், வழிகாட்டவும் பரிசுத்த ஆவியானவரை தந்திருக்கிறார். வேதாகம ஆசிரியர்களே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை விசுவாசிக்கிற ஒவ்வொரு புருஷனையும், ஸ்திரியையும் நான் நேசிக்கிறேன் என்று உங்களுக்கு தாழ்மையோடு கூறிக் கொள்கிறேன். மேலும் நான் ஒரு தர்கிக்கிறவனும் அல்ல. நான் சச்சரவு செய்கிறவனும் அல்ல. அதை நான் விசுவாசிப்பதும் கிடையாது. வெறுமெனே வார்த்தையை பெற்றுக் கொள்வதைத்தான் நான் விசுவாசிக்கிறேன்; அவ்வளவுதான். இது தேவனுடைய வார்த்தை என்று நான் விசுவாசிக்கிறேன். நான் விசுவாசிக்கிறபடி இது தேவனுடைய வார்த்தையாக இருந்து; அவருடைய நிபந்தனைகளை நான் சந்தித்து அவருடைய இராஜ்ஜியத்தில் பரிசுத்த ஆவியினால் என்னை அவர் முத்திரித்திருக்கும்போது, வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்திற்கும் அவர் எனக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவராயிருக்கிறார். அதை ஒரு மதவெறித்தனம் என்று நான் விசுவாசிப்பதில்லை, அதைக் குறித்து அதிகப்படியான மதவெறியர்கள் நமக்கு இருப்பினும் அது ஒரு மதவெறித்தனம் ஆகாது; அது முற்றிலும் சத்தியமாயிருக்கிறது. எனவே தேவன் அவருடைய வார்த்தைக்கு கடமைப்பட்டவராய் இருக்கிறபடியினாலும், அவருடைய வார்த்தையை காத்துக் கொள்ள வேண்டியவராய் இருக்கிறபடியினாலும், அதை நிறைவேற்றும் படிக்கு அதின் மேல் அவர் கவனமாய் இருக்கிறார். 30.உங்களுக்குத் தெரியுமா? உலகத்திலுள்ள ஒவ்வொரு மதவெறித்தனமும் எங்கிருந்து வந்தது என்று தெரியுமா? இன்றைக்கு உலகத்தில் எழும்பியிருக்கும் ஒவ்வொரு மதவெறித்தனத்திற்கு (Cult) காரணம் பசியாயிருக்கும் (நித்திய ஜீவனுக்காக) பிள்ளைகளால் தான். அப்படி பசியாயிருக்கும் பிள்ளைகளால் தான் அஞ்ஞான தேசத்தில் இருக்கும் அஞ்ஞானிகளை விக்கிரகங்களை தொழுது கொள்ள செய்தது. பசியாயிருக்கும் பிள்ளைகள் இது சரியாயிருக்குமா அல்லது அது சரியாய் இருக்குமா என்று வார்த்தையைத் தேடி பார்க்க முயற்சித்ததினால் தான் மதவெறிப்பிடித்தவர்களை தேசத்தினூடாக கடந்து போகச் செய்தது. ஒவ்வொரு (Cult) மதவெறித்தனமும் அங்கிருந்துதான் தோன்றியது. அந்த உத்தம இருதயம் கொண்ட மக்களின் பசியும் மற்றும் தேவனை தேட வேண்டும் என்ற தாகமும் இன்றைக்கு அநேக காரியங்களை... ஆரம்பத்திலிருந்தே மனிதன் மற்றும் ஸ்திரிக்குள்ளாக இருக்கும் ஏதோ ஒன்று நித்திய ஜீவன் என்ற ஒன்று எங்கேயோ இருக்கிறது என்று அவர்களுக்கு சொல்கிறது. சிலர் அதை விக்கிரகங்களிடத்தில் தேடுகிறார்கள். சிலர் அதை புண்ணிய ஸ்தலத்தில் தேடுகிறார்கள். 31.ஒரு சில வாரங்களுக்கு முன் ரோமாபுரியில் இருக்கும் ஒரு பெரிய சபையில் இருந்தேன், அங்கே மரித்துப்போன மடத் துறவிகளை, தோட்டத்தில் நடுவதுபோல அவர்களை மண்ணில் புதைத்துக் கொண்டிருந்த ஒரு சபைக்கு என்னை கொண்டு சென்றார்கள். அங்கே இப்படியாக நினைக்கிறவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். எப்படியெனில் புதைக்கப்பட்ட அவர்களின் சரீரம் அழுகி, தோல் புழுக்கள் அவர்களுடைய சரீரத்தை தின்றுபோடும். அதன் பிறகு அவர்களுடைய எலும்புகளைதோண்டி எடுத்து அவர்களுடைய சிறு விரல் எலும்புகளையும் இன்னும் அப்படிப்பட்டவைகளை ஒரு அறையில் அவர்கள் படத்தோடு கூட ஒன்றாக வைப்பார்கள். அங்கே அந்த சுவர் நெடுகிலும் மனித மண்டை ஓடுகள் இன்னும் மற்றவைகளையும் சேர்த்து கட்டி சுற்றி வைத்திருந்தார்கள். அந்த முழு கட்டிடமும் அவ்விதமான காரியங்களை கொண்டதாய் இருந்தது. அங்கே மரித்துப் போய் கல்லறையில் இருக்கும் அநேக மடத் துறவிகள் திரும்ப வந்து அங்கே வைக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய எலும்புகளை எடுத்துக் கொள்வார்களாம். 32.எனவே, அங்கே நான் வழிகாட்டியுடன் நடந்து சென்ற போது சில மண்டை ஓடுகளை நான் கவனித்தேன். அங்கே மக்கள் தொடர்ச்சியாக செல்வதால் அங்கேயிருக்கும் சில மண்டை ஓடுகள் அடிக்கடி கைகளால் தடவப்பட்டு பளபளப்பாக இருந்தது, அவ்வாறு மக்கள் அந்த மடத் துறவிகளின் மண்டை ஓடுகளை தடவுவதால் தாங்கள் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம் என்றும், மற்றும் அந்த மடத்துறவிகள் கடந்துபோன அவ்விடத்திலிருந்து ஏதோ காரியத்தை தாங்கள் பெற்றுக் கொள்வோம் என்றும் நினைக்கிறார்கள். அங்கே அந்த கட்டிடத்திற்கு பின்னாக அல்லது சபை இருந்த அவ்விடத்தில் கவனத்தை ஈர்க்கிற ஒரு காரியம் இருந்தது. அங்கே ஒரு அறிவிப்பு இருந்தது. அது ஒரு பொருத்தமான அறிவிப்பு என்று நான் எண்ணினேன். அதில் இப்படியாக, ''நீங்கள் இப்பொழுது இருக்கிறது போல நாங்களும் ஒரு காலத்தில் இருந்தோம். ஆனால் நாங்கள் இப்பொழுது எப்படி இருக்கிறோமோ அப்படியே நீங்களும் என்றோ ஒரு நாளில் இருப்பீர்கள்". என்று எழுதியிருந்தது. அது உண்மைதான். நீங்கள் சிந்திக்கும்படிக்காக ஏதோ காரியத்தை அது கொடுக்கிறது. 33.எனவே, அப்படி அந்த மண்டை ஓடுகளை அவர்கள் தடவுவதால் அது அவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் அது எதை காண்பிக்கிறது? ஒரு சமயம் இந்த சரீரத்தில் ஜீவித்த யாரோ ஒருவர் எங்கேயோ கடந்து சென்றிருக்கிறார்கள் என்றும், அப்படிப்பட்டவர்களின் மண்டை ஓடுகளை தடவுவதால், அது அவர்களுக்கு ஆசீர்வாதத்தை கொடுக்கும் என்றும் ஆத்ம பசியை கொண்டிருக்கும் இந்த ஜனங்கள் நினைக்கிறார்கள். அது வெறுமெனே மனிதத் தன்மையாய் இருக்கிறது. அது தாமே இருதயத்திலிருக்கிற ஏதோ ஒன்று, அந்த காரியத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதின் அழைப்பும், தவிப்பும், மற்றும் அதை பெறவேண்டும் என்கிற பசியும், தாகமுமாய் இருக்கிறது. எனவே, சரியான ஒரு காரியம் இருந்தே ஆகவேண்டும். மனித இருதயத்திற்குள்ளாக அதற்கான பசியை நாம் பார்க்கும்போது அதின் அடிப்படையான துவக்கத்தை நாம் பார்க்கிறோம் மேலும் அதுதாமே அவர்களை மெய்யான காரியத்திற்கோ அல்லது பொய்யான காரியத்திற்கோ வழிநடத்தி செல்கிறதாயிருக்கிறது. நண்பர்களே, அது நிச்சயம் இருந்தாக வேண்டும். அதை என் முழு இருதயத்தோடும் பயபக்தியுடன், உங்கள் சகோதரனில் ஒருவனாக அதைச் சொல்கிறேன். 34.உங்களுடைய நம்பிக்கையையோ அல்லது உங்கள் மதத்தையோ நான் சிறுமைப்படுத்தவில்லை. இங்கே இன்றிரவு அநேக மதத்தை பிரதிநிதிப்படுத்துகிற, அநேக மதத்தைச் சேர்ந்த, ஸ்தாபனங்களின் வெவ்வேறுபட்ட குழுக்களும் இன்னும் அப்படிப்பட்டவர்களும் இங்கே இருக்கலாம். நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுக்கிறேன். இப்பொழுது, நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதற்கு முன், அந்த சிறிய அடிப்படையான எண்ணத்தை உற்று நோக்கிப் பார்ப்போம். அதை நாம் கவனித்து என்னவென்று பார்ப்போம். இப்பொழுது நாம் அடிப்படைக்கு செல்கிறோம் என்று இந்த கடைசி வசனத்தில் இயேசு கூறுகிறார், ''நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால்... இயேசு, என் வார்த்தைகளை கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு", என்றார். நமக்கு நித்திய ஜீவன் உண்டு. அதை நாம் விசுவாசத்தினால் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். 35.இப்பொழுது, இயேசு, ''என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்த கிரியைகளை அவனும் செய்வான், மேலும் அதைக் காட்டிலும் அதிகமானவைகளை செய்வான்", என்றார். அதின் சரியான மொழிபெயர்ப்பு ''அதிகமானவைகளை" (more என்று அர்த்தமாகும். கிங் ஜேம்ஸ் (King James) வேதாகமம் "பெரிதானவைகளை" (Greater) என்று கூறுகிறது. எவ்விதமான பெரிதானவைகள், அதற்கு அர்த்தம் தரத்தில் (quality)அல்ல, அது அப்படி இருக்க முடியாது. ஆனால் அது எண்ணிக்கையை (quantity) தெரிவிக்கிறது. காரணம் அவர் உலகம் முழுவதும் கிரியை செய்கிறவராயிருக்கிறார். அவரால் இங்கே கிரியை செய்ய முடியும், மற்றும் இத்தாலி, பாரீஸ், இன்னும் உலகமெங்கும் அவரால் கிரியை செய்யமுடியும். நான் என் பிதாவினிடத்தில் போகிறபடியால் இதைக் காட்டிலும் மேலானவைகளை நீங்கள் செய்வீர்கள். கொஞ்ச காலத்திற்கு உலகம் என்னைக் காணாது; ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள்; ஏனெனில் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன். 36.இப்பொழுது, நாம் கிறிஸ்தவர்கள் என்ற முறையில் இயேசு கிறிஸ்து மரித்தார் என்று விசுவாசிக்கிறோம். இயேசு இங்கே பூமியில் இருந்தபோது, இங்கே பூமியில் நடந்து திரிந்தபோது, அவர் நோயாளிகளை சுகமாக்கினார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறீர்கள்? அவர் மரித்தோரை எழுப்பினார். அவர் அசுத்த ஆவிகளை துரத்தினார். அவர் பிதாவானவர் காண்பிக்காத வேறொன்றையும் அவர் தானாக செய்யவில்லை. பரிசுத்த யோவான் 5:19-ம் வசனத்தில், ''அவர் மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்..." இப்பொழுது, அவர், "இந்த நபரை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்; என்னால் அவனை சுகப்படுத்த முடியும் என்பதை காண்பிக்கட்டும்", என்று கூறி சுற்றித்திரிகிற அப்படிப்பட்ட நபர் அல்ல அவர். இல்லை. இல்லை. இல்லை. எங்கு போக வேண்டும், என்ன செய்யவேண்டும் என்று பிதாவானவர் அவருக்கு எதை காண்பிக்கிறாரோ, அங்கே போய் அதையே செய்து முடித்தார். 37.ஒருவேளை திரும்ப கூற வேண்டும் என்ற எண்ணத்தில் இதை நான் கூறலாம். அப்படி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இதை நான் செய்யவில்லை, இருப்பினும் அதை ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். இருப்பினும் நாம் அவருடைய ஜீவியத்தை குறித்து சற்று நேரம் பார்த்து, அவர் எப்படிப்பட்ட நபர் என்பதை அறிந்து கொள்ளலாம். அப்பொழுது அவர் இன்றைக்கு என்னவாயிருப்பார் என்பதை குறித்ததான ஒரு பொதுவான கருத்து உங்களுக்கு கிடைக்கும். எனவே அவர் பூமியின் மீது இருந்தபோது, தேவத்துவத்தை குறித்ததான ஒவ்வொன்றிற்கும் அவர் ஒரு பரிபூரண எடுத்துக்காட்டாயிருந்தார். சரீரபிரகாரமாக பார்க்கும் போது அவர் தேவத்துவத்தின் பரிபூரணமாயிருந்தார். கிறிஸ்துவுக்குள் தேவன் இருந்தார். இயேசுவின் சரீரம், நிச்சயமாக அது ஒரு தேவனுடைய கூடாரமாயிருந்தது. அதுதாமே சர்வவல்லமையுள்ள தேவனாகிய அவரே ஒரு மனுஷனுக்குள்ளாக இருந்து ஜீவித்து, வாசம் பண்ணினதாயிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், இல்லையா? நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டுமானால். அதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். 38.தேவனாகிய அவர் தாமே தன் மக்களுக்கு தன் அன்பை வெளிப்படுத்தவும், உலகத்தினுடைய பாவத்தை எடுத்துப் போடும்படிக்கும் இங்கே இந்த பூமியில் மாம்சமானார். இங்கே தன்னுடைய சொந்த சரீரத்தில் மரணத்தை ஏற்றுக் கொள்ளவும், வியாதியை தன் சொந்த சரீரத்தில் ஏற்றுக் கொள்ளவுமே அவர் வந்தார். உன்மேல் வரவேண்டிய சாபத்தை தன் மேலாக அவர் எடுத்துக்கொண்டு, பிதாவோடு வைத்திருந்த இந்த முழு ஐக்கியத்திற்கு திரும்ப உன்னை கொண்டு வரும்படிக்கு அவர் மனிதனாக வந்து மரிக்கவேண்டியதாய் இருந்தது. அது எப்பேற்பட்ட ஒரு ஆச்சரியமான காரியம். அது எப்பேற்பட்ட காரியம் என்றும், அவர் செய்தது என்னவென்பதையும் நம்முடைய இருதயங்கள் கிரகிக்க முடியாது. ஏனெனில் நாம் மிகவும் மெதுவாக செயல்படுகிறவர்களும், மற்றும் நம்முடைய சிந்தைகள் மந்தமானதாகவும் இருக்கிறது. நம்முடைய குழாய்களும் அடைப்பட்டு இருக்கிறது. அவைகள் அவிசுவாசத்தினாலும், பயத்தினாலும், சந்தேகத்தினாலும் செயல்பட முடியாமல் போய்விட்டது. எனவே ஜீவனானது அதற்குள் இயங்க ஆரம்பிக்கும் வரைக்கும், அதற்குள்ளாக இருக்கும் அடைப்புகளை வெளியே தள்ளும் படிக்கு பரிசுத்த ஆவியானவருக்கு நம்முடைய ஜீவியங்களை முழுஆளுகை செய்யும்படிக்கு நாம் விட்டுக் கொடுக்காத வரைக்கும், அது (குழாய்) எப்பொழுதும் ஓடுகிறதுபோல தங்குதடையின்றி அதனால் ஓட முடியாது. பாருங்கள். அதன் பின்பு நிச்சயமாக, அது பிதாதான் என்று நம்மால் அதை பார்க்கமுடியும். 39.எனவே, உங்களை அறியாமலேயே உங்கள் விசுவாசம் உங்களுக்குள் இருக்கிறது. இதை செய்வதற்கு அல்லது அதை செய்வதற்கு உங்களுக்கு போதுமான விசுவாசம் இருக்கிறதா என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நிச்சயமாக அது அங்கே இருக்கிறது. ஏனெனில் பிதா அதை கூறியிருக்கிறபடியால் அதை அப்படியே நீங்கள் செய்கிறீர்கள். அது ஜீவிக்கிற வார்த்தை உனக்குள் இருப்பதையும் மற்றும் அவர் கிறிஸ்துவுக்குள்ளாக இருந்தது போல, தேவன் உனக்குள்ளாக இருந்து அவரை வெளிப்படுத்திக் காட்டுவதாகும். "அவர் கிறிஸ்துவுக்குள் இருந்தது போலவே", என்றா நீங்கள் கூறுகீறீர்கள்? ஆம், ஐயா. அவர், நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்; இதைக் காட்டிலும் அதிகமானவைகளை செய்வீர்கள் ஏனெனில் நான் பிதாவினிடத்திற்கு போகிறேன்", என்று கூறினார். ஆகவே அது தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது, பரிசுத்த யோவான் 14:12. அந்த வாக்குத்தத்தத்தை அவர் கொடுத்திருக்கிறார். அது (தேவனால்) ஊக்குவிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் விசுவாசிப்பார்கள். எனவே, இனி கொஞ்சம் காலத்திற்கு உலகம் என்னை காணாது, ஆனால் நீங்களோ என்னை காண்பீர்கள், நான் உங்களோடு அப்போஸ்தல காலம் வரைக்கும் இருப்பேன்? இல்லை. "நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்". எபிரேயர். 13:8-ம், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று கூறுகிறது. 40.அவர் பூமியில் இருந்தபோது என்னவாக இருந்தார்? எளிமையான தொழுவத்தில் பிறந்து, தாழ்மையான மனிதனாக இருந்தார். நாம் பள்ளிக்கு சென்று கல்வியறிவை பெற்றுக் கொண்டதுபோல; அவர் பெரிய, நல்ல கல்வியறிவை பெற்றுக் கொள்ளவில்லை. அவர் அவருடைய சொந்த ஊருக்கு தன் மக்களிடத்திற்கு வந்தபோது, அவர் இந்த ஞானத்தை எங்கிருந்து பெற்றுக் கொண்டார் என்று அறியும் பொருட்டு, "அவர் எந்த பள்ளிக்கு சென்று கல்வி பயின்றார்? எந்த வேதாகம கல்லூரியில் படித்து பயிற்சி எடுத்தார்? என்று விசாரித்தனர். அதைக் குறித்து அவர்கள் ஒன்றும் அறியாமலிருந்தனர். அவர் இங்கிருக்கும் ஒரு சாதாரண தச்சனுடைய மகனல்லவா? என்றனர். ஒரு மனிதன் பெற்றுக் கொள்ளக்கூடிய சராசரி பயிற்சியை அவர் பெறவில்லை. அவர் பன்னிரெண்டாம் வயதில் தான் பெற்றிருந்த ஞானம், வேதபாரகர்கள் அறிந்திருந்ததைக் காட்டிலும் விஞ்சியிருந்தது. உலக மற்றும் கல்வி அறிவை பெற்றிருப்பதற்கும், தேவனுடைய வல்லமையைக் கொண்டு ஞானத்தில் மேலோங்கியிருப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. கல்விமான்களுக்கு இதை மறைத்து, கற்றுக் கொள்கிற பாலகருக்கு அதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே அதை அறிந்து கொள்ள வேதாகம கல்லூரி மூலமோ அல்லது பள்ளிகள் மூலமோ முயற்சி செய்யவேண்டிய அவசியமில்லை. அதை உங்களால் அப்படி அறிந்து கொள்ள முடியாது. அது மறைக்கப்பட்ட இரகசியமாயிருக்கிறது. அதை தேவன் எவருக்கு அறிந்து கொள்ள செய்கிறாரோ அவர்களால் மட்டுமே அதை அறிந்து கொள்ள முடியும். நீங்கள் அதை உணர்ந்து கொண்டால், அது சத்தியம் என்பதை அறிவீர்கள். 41.இப்பொழுது, சற்று அவரை பார்ப்போம். அவர் இங்கே பூமியில் இருந்தபோது நாம் அவரை பார்க்கையில்... பிலிப்பு என்ற ஒரு நபர் அவரிடம் வந்து, இரட்சிப்பை பெற்றுக் கொண்டான். அதை அவனுடைய நண்பன் நாத்தானியேலிடத்தில் வந்து கூறினான். அவன் அவனை ஒரு ஜெபக்கூட்டத்திற்கு அல்லது அவர்கள் நடத்திக் கொண்டிருந்த ஏதோ ஒரு கூட்டத்திற்கு அழைத்து வந்து, ஒருவேளை அது ஒரு ஜனக்கூட்டத்தில் அல்லது ஏதோ ஒரு கூட்டத்தில் அவர்கள் வந்து கலந்து கொண்டிருக்கலாம். ஆனால் இயேசு அவனை கவனித்து அல்லது அவன் எங்கிருந்தாலும் தன் பார்வையை சிதறாமல் அவன் மேலாக வைத்தார். ஒருவேளை அவன் ஜெப வரிசையிலோ அல்லது வேறெங்காவது இருந்திருக்கலாம். இயேசு அவனை நோக்கி, ''இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்", என்றார். அதற்கு அவன், "நல்லது. ரபி, நீர் எப்பொழுது என்னை அறிவீர்", என்றான். அவர், ''பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்னமே, நீஅந்த மரத்தின் கீழாக இருக்கும்போது, உன்னைப் பார்த்தேன்", என்றார் அது முற்றிலும் பிரமிக்க வைக்கிறதாய் இருக்கிறது. அவன், ''நிச்சயமாகவே, நீர் தேவனுடைய குமாரன். நீர் இஸ்ரவேலின் இராஜா", என்றான். அதற்கு அவர், "நான் இதை கூறினபடியால் நீ விசுவாசிக்கிறாய். இதைக் காட்டிலும் மேலானதை நீ காண்பாய்", என்றார். 42.நடக்கும்படிக்கு கொடுக்கப்படும் அந்த வெளிச்சத்தை கண்டு அதை விசுவாசிக்கிறவனுக்கு மட்டுமே பெரிதான வாக்குத்தத்தம் கொடுக்கப்படும். எனவே நீங்கள் அந்த வெளிச்சத்தை நிராகரிக்கும்போது, உங்களுக்கு விடப்பட்டிருக்கும் ஒரே ஒரு காரியம், அது காரிருளாயிருக்கும். ஆகவே வெளிச்சம் இருக்கும்போதே... நாம் அவரை சற்று கவனிப்போம். அவர் பெதஸ்தாவண்டையில் அந்த எல்லா சப்பாணிகள் மற்றும் முடமானவர்கள் இருக்கும் வழியாக கடந்து சென்றபோது, அவர் தன்னை ஒரு சுகமளிப்பவர் என்று உரிமை கோரவில்லை. அவர் ஒருவரையும் சுகப்படுத்தவில்லை. ஆனால் அங்கே ஒரு சிறிய படுக்கையில் அல்லது மெத்தை அல்லது அது போன்ற ஏதோ ஒன்றில் படுத்துக் கிடந்த ஒரு மனிதனிடத்தில் சென்று, ''நீ சுகமடைய விரும்புகிறாயா", என்று கேட்டார். 43.மேலும் அவன் அங்கே இருந்தான் என்றும் அவ்விதமாக அங்கே அவன் முப்பத்தெட்டு வருடங்களாக இருக்கிறான் என்பதையும் இயேசு அறிவார் என்று வேதாகமம் கூறுகிறது. இப்பொழுது, அது நேற்றைய இயேசு, அப்படியில்லையா? அவன் அவ்விதமாக முப்பத்தெட்டு வருடங்களாக இருக்கிறான் என்று அவருக்குத் தெரியும். அவர் அவனிடத்தில், "நீ சுகமடைய விரும்புகிறாயா? என்று கேட்டார். அவர் அந்த குளத்தை கடந்து போனபோது ஏன் அந்த குருடர், சப்பாணி, நொண்டி, கை கால் சூம்பிப் போனவர்களை பார்த்து அப்படி கேட்கவில்லை? ஏன் அவர்கள் எல்லோரையும் அவர் சுகப்படுத்தவில்லை? அதை அவர் 19-ம் வசனத்தில் புரியும்படி விளக்குகிறார். அவர், ''மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். "நான் உங்களுக்கு என்ன சொல்லுகிறேன் என்று புரிகிறதா? அந்த ஸ்திரி அவருடைய வஸ்திரத்தை தொட்டபோது, அவர், ''நான் உன்னை சுகப்படுத்தினேன்", என்று கூறவில்லை. ஆனால் அவர், "உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது", என்றார். அவர் மேல் வைத்த அவளுடைய விசுவாசம் தான் அவளை சுகப்படுத்தினது. 44.அப்போஸ்தலனாகிய பேதுரு கடந்து போகும் போது, வியாதியஸ்தர்கள் மேல் விழுந்த அவனுடைய நிழல்அது அவர்களை சுகப்படுத்தவில்லை. அது அவனுடைய நிழல் அல்ல, ஆனால் அந்த அப்போஸ்தலன் மேல் அவர்கள் வைத்த விசுவாசமே அவர்களை சுகப்படுத்தியது; அதுதாமே அவர்கள் தேவனை தொடக்கூடிய சந்திப்பு (Point of Contact) குறியாய் இருந்தது. எனவே இயேசு பூமியில் இருந்தபோது, அவர் செய்த சுகமளித்தல்கள் நிமித்தம், அவர் எவரையாவது சுகப்படுத்தினார் என்று ஒருபோதும் உரிமை கோரவில்லை. ஆனால் பிதாவானவர் தனக்கு தரிசனத்தில் காண்பித்ததையே தான் செய்தார் என்று உரிமை கோரினார். ஆனால் அவரால் அங்கு நின்று கொண்டிருக்கும் ஜனத்தை உற்று நோக்கி, அவர்கள் மத்தியில் இருக்கும் ஒரு நபரிடத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை சொல்லக்கூடிய அளவுக்கு, அவர் வல்லமையை பெற்றிருந்தார் என்று நம்மெல்லாருக்கும் தெரியும். உதாரணத்திற்கு சொல்வோமானால், அந்த பெரும்பாடுள்ள ஸ்திரி அவருடைய ஆடையை தொட்டதுபோல் அது இருந்தது. ஏதோ காரியம் அவரிடத்திலிருந்து புறப்பட்டு சென்றது. ஏதோ ஒரு வழியில், ஏதோ காரியம் நடந்திருக்கிறது என்று அவர் அறிந்திருந்தார். அதை இப்பொழுது நாம் பார்க்கிறோம் என்று நான் நம்புகிறேன். 45.இயேசு அவ்விதமான வல்லமையை பெற்றிருந்தார், அதை நாம் இந்த வழியில் கூறுவோம். ஆதாமின் மீறுதலுக்கு முன்னதாக நாம் என்னவாக இருந்தோமோ, அந்த நிலைக்கு நம்மை திரும்பவும் மீட்கிற மீட்பராக இருந்தார் இயேசு. அவர் தாமே பூமியில் இருந்தபோது, முதலில் அவருக்குள் பரிசுத்த ஆவியானவர் தங்கி வாசம் செய்யும் ஒரு எடுத்துக்காட்டான தேவகுமாரனாக இருந்தார். அதற்குப் பின்அவர் அநேக பிள்ளைகளை தேவனிடத்தில் கொண்டு வரவேண்டியதாயிருந்தது. அவர் இங்கே பூமியில் இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட நபர் விசுவாசத்தை உடையவராய் இருப்பாரானால், அக்குறிபிட்ட நபர் இருக்கும் கூட்டத்தினிடத்தில் திரும்பி, அவர்(கள்) யார் என்று சொல்லக்கூடிய வல்லமையை அவர் பெற்றிருந்தார். ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டாள். அது அவளை திருப்திபடுத்தினது. அவள் ஜனக் கூட்டத்துக்குள் திரும்பி வேகமாகச் சென்றாhள். ஏனெனில் அதற்கு பிறகு அவளுடைய உதிரப்போக்கு பிரச்சனை முழுவதுமாக சொஸ்தமடையப் போவதை அவள் உணர்ந்தாள். எனவே அவள் ஜனக்கூட்டத்துக்கு பின்னாகச் சென்று, அங்கே நின்று கொண்டிருந்தாள். 46.இயேசு திரும்பி, கூட்டத்தை சுற்றும் முற்றும் கவனித்து, ''என்னைத் தொட்டது யார்?," என்றார். 'என்னைத் தொட்டது யார்', என்று அவர் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக அவரால் அவளைக் கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால் அவர் கூட்டத்தினிடத்தில் திரும்பி, 'என்னைத் தொட்டது யார்', என்றார். அவளோ அங்கே ஒன்றும் அறியாதவள் போல் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் அவளை நோக்கி, ''உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது", என்றார். பாருங்கள். அது நேற்று இயேசு எப்படி இருந்தார் என்பதை காட்டுகிறது. இப்பொழுது, நான் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். அது அவர் பூமியில் இருந்தபோது, அவ்விதமான ஜீவியத்தைத்தான் அவர் ஜீவித்தார். மற்றும் பிதாவின் கிரியைகளையே தன்னுடைய கிரியையாக செய்தார். அவர், ''நான் தேவனுடைய சித்தத்தை செய்யவும், நான் பிதாவினுடைய சித்தத்தை செய்யவும் வந்திருப்பேனென்றால்..." முன் காலத்தில் தேவனுடைய வார்த்தையில் சொல்லப்பட்ட அதையே அவர் நிறைவேற்ற வந்தார். தேவன் அவருக்குள்ளாக இருந்து அவருடைய வாஞ்சையை மக்களிடத்தில் நிறைவேற்றினார். 47.எனவே, அவர், ''நான் போனபின், பிதாவானவர் பரிசுத்த ஆவியின் வடிவில் வந்து உங்களோடும்,உங்களுக்குள்ளும் உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பார். நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்," என்றார். அது வேத வார்த்தையாய் இருக்கிறது. இல்லையா? இப்பொழுது, உங்களை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். எனவே இன்றிரவு அவர் வரவேண்டிய இந்த வடிவில் நான் கூறினது போல் அவர் வந்திருப்பாரானால்... நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். எனவே, இன்றிரவு நீங்கள் படுக்கைக்கு போகும் போது இதைக் குறித்து சிந்தித்து பார்க்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இங்கே பூமியில் மாமிச சரீரத்தில் இருந்தபோது, அவருக்கு வியாதியஸ்தர்களை சுகப்படுத்தக் கூடிய வல்லமையும் மற்றும் பிதாவானவர் அவருக்கு செய்யும்படிக்கு கொடுத்ததை செய்யவும், தரிசனங்களை பார்க்கும்படிக்கான வல்லமையும் இருந்தது.சரி, நமக்காக அவர் ஏற்றுக் கொண்ட பாடு, மரணம், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் இவைகள் நிமித்தம், அவர் பெற்றிருந்த வல்லமையை இழந்து போனாரா? அவருடைய பாடுகள், மரணம்,அடக்கம் பண்ணப்படுதல், உயிர்தெழுதல் மூலம் அவர் தேவனுக்கு கீழ்படிந்ததினிமித்தம், அவர் தான் பெற்றிருந்த வல்லமையை இழந்து போனாரா? அல்லது அதை பெருகப் பண்ணினாரா? ஆம். 48.பரிசுத்த மத்தேயு 19:18-ம் வசனம் இப்படி கூறுகிறது... அது பரிசுத்த மத்தேயு 28:18 என்று நினைக்கிறேன். அவர், ''வானத்திலும் பூமியிலும் (உயிர்த்தெழுதலுக்கு பிறகு) சகல அதிகாரமும் என்னுடைய கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது", என்றார். அப்படியானால் அவர் தன்னுடைய அதிகாரத்தை இழக்கவில்லை. ஆனால் இன்னும் அதிகமான அதிகாரத்தை அவர் சம்பாதித்துக் கொண்டார். அது சரிதானே? எனவே அவர் அதிகமான அதிகாரத்தை சம்பாதித்திருக்கும்போது, அவரால் இன்னும் அதிகமான காரியங்களை செய்ய முடியும். அது சரிதானே? இப்பொழுது, இன்றைக்கும் அவர் சபையில் ஜீவிக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், எப்படியெனில் அவர் செய்த அதே கிரியைகளை நாமும் செய்வோம் என்று வாக்குரைத்திருக்கிறார். நீங்கள் அது சத்தியம் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நம்முடைய விசுவாசத்திற்கு நாம் எப்படிப்பட்ட அடிப்படையை இன்றிரவு நாம் பெற்றிருக்கிறோம்? நண்பர்களே, முதலாவது காரியம், இங்கிருக்கும் சிலர் தெய்வீக சுகமளித்தலை விசுவாசியாமல் இருக்கலாம், சிலர் தேவனுடைய வல்லமையை விசுவாசியாமல் இருக்கலாம். ஆனால் முதலாவது, நீங்கள் எல்லா சூழ்நிலைகளையும் கட்டுப்படுத்தும் படிக்காகவே இங்கே பிறந்தீர்கள். 49.ஊழியக்காரர்களே நான் உங்களை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். உங்களால் வியாதியை எதிர்கொள்ள முடியாதபட்சத்தில், உங்களால் எப்படி பாவத்தை எதிர்கொள்ள முடியும்? நீங்கள் வியாதியை எதிர்கொள்ளாமல், அதைக் காட்டிலும் பெரிதான பாவத்தை உங்களால் எதிர்க்க முடியாது. ஏனெனில் வியாதியானது பாவத்தின் ஒரு தன்மையாயிருக்கிறது. நீங்கள் வியாதியையும் அதினுடைய எல்லா தன்மைகளையும் எதிர்கொள்ளாமல், உங்களால் வியாதியை அல்லது பாவத்தை ஒருபோதும் தொடமுடியாது. அது சர்ப்பத்தின் தலையாயிருக்கிறது. நீங்கள் தலையை கொல்லும்போது, உண்மையிலேயே நீங்கள் முழு சரீரத்தையும் கொன்று போடுகிறீர்கள். நீங்கள் அதின் தலையைக் கொல்லாமல், உங்களால் அதின் சரீரத்தையும் சேர்த்து அதை கொல்லமுடியாது. எனவே அவர் நமக்கு சுகத்தை மட்டும் கொடுக்க வந்து, நம்மை இரட்சிக்காமல் போவாரானால், நாம் இரட்சிப்பை குறித்து வேறு விதமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் அவரோ தலையாகிய, நம்முடைய ஆத்தும இரட்சிப்போடு இடைபடும்படிக்கு வந்தார். எனவே நீங்கள் தலையை கொல்லும்போது, சரீரத்தின் மற்ற எல்லா பாகங்களையும் கொல்லுகிறீர்கள். 50.இயேசு நம்மை பாவத்திலிருந்து மட்டும் விடுவிக்க வராமல், வியாதி அல்லது அதோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் இன்னும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிக்க வந்தார். அவர் நம்மை மரணத்திலிருந்து விடுவித்திருக்கிறார். எனவே நாம் மரிப்பதில்லை. ஒரு கிறிஸ்தவன் மரிப்பான் என்று குறிப்பிடுகிற ஒரு வசனம் கூட வேதாகமத்தில் இல்லை. நாம் நித்திய ஜீவனை உடையவர்கள், நாம் மரிப்பதில்லை. தேவன் நம்முடைய சரீரத்தை கடைசி நாளில் உயிர்பிப்பார் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இந்த நிச்சயத்தின் மேல் நாம் இளைப்பாறுகிறோம். என்றோ ஒரு நாள் நிகழப்போகிற நம்முடைய முற்றிலுமான மீட்பும் மற்றும் இரட்சிப்பின் அச்சாரமாகிய (மெய் உறுதிப்பாடு) இரட்சிப்பையும், சந்தோஷத்தையும், களிப்பையும் நாம் இப்பொழுது பெற்றிருக்கிறோம். மேலும் நாம் பெற்றுக் கொள்ளப் போகிற சாவாமையுள்ள சரீரங்களின் அச்சாரமாகிய தெய்வீக சுகமளித்தலையும் நாம் பெற்றிருக்கிறோம். நாம் அவருடைய மரணத்தின் தன்மைகளை இந்த பழமையான, இயற்கையான பாவத்தினால் சபிக்கப்பட்ட சரீரத்தில் பெற்றுக் கொள்ளும்போது; அது திரும்பவும், உடனடியாக நம்மை ஜீவனுக்கு கொண்டு செல்கிறது. அது நதிக்கு அப்பால் ஒரு தேசம் உண்டென்றும்; வியாதி, துக்கம், மரணம் இல்லாத அந்த பரிபூரணமான ஏதேனுக்கு என்றோ ஒரு நாள் நாம் திரும்ப போகிறோம் என்கிறதை அது நிரூபிக்கிறதாயிருக்கிறது. என் நண்பனே, கர்த்தர் தாமே உம்மை ஆசீர்வதிப்பாராக. 51.இப்பொழுது, இங்கே இருக்கும் சிகாகோ மக்களாகிய உங்களுக்கும், இதை சுற்றிலும் இருக்கிறவர்களுக்கும் என்னுடைய விவாதம் என்னவெனில் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும், அன்று அவர் செய்த கிரியைகளை இன்னும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்பதேயாகும். இப்பொழுது, நீங்கள் என் கொள்கையில் வந்து சேர்ந்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்களிடத்தில் கூறவில்லை. ஏனெனில் நான் எந்த ஒரு சபையையும் சேர்ந்தவனில்லை. நான் எந்த ஒரு ஸ்தாபன சபையையும் சேர்ந்தவனில்லை. எந்த ஒரு ஸ்தாபன சபைக்கு எதிராகவும் நான் எந்தவொன்றையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் நான் இதை மட்டும் உங்களிடத்தில் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஒரு ஸ்தாபன கிறிஸ்தவனாக மட்டுமே இருந்து கொண்டு, விசுவாசிக்கிறேன் என்று கூறிக் கொள்வதினால் நீங்கள் ஒரு போதும் இரகசியத்தை பார்க்கமுடியாது. நீங்கள் உங்கள் சபையில் தரித்திருங்கள், ஆனால் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாய் இருங்கள். அப்பொழுது உங்கள் உள்ளான நபரிலும், உங்கள் சிந்தையிலும், உங்கள் ஆத்துமாவிலும் இருக்கும் குழாய்கள், நீங்கள் அந்த ஸ்தாபனத்தில் ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் என்னவாக இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிற ஒரு முழுமையான நிலைக்கு அவை திறந்து கொடுக்கும், நீங்களும் நன்மை செய்கிறவர்களாய் இருப்பீர்கள். உங்களுடைய மேய்ப்பரும் ஆவிக்குரிய மனிதனாக இருக்கும்பட்சத்தில், அவர் உங்களை மெச்சிக் கொள்வார் (பாராட்டுவார்). 52.இப்பொழுது கர்த்தராகிய இயேசு காட்சியில் வருவாராக. நான் அதிகமாக, நிறைய பேசிவிட்டேன். ஆனால் நமக்கு வேதாகமத்தில் ஒரு அடிப்படையான காரியம் இருக்கிறது என்று நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் இதுவரை கேட்டதைக் காட்டிலும் இது சற்று வித்தியாசமானதாயிருக்கும். நான் முடிப்பதற்கு முன் இது, என் நினைவுக்கு வருகிறது. இதை நான் சொல்லியாக வேண்டும். தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்காத, ஒரு குறிப்பிட்ட ஸ்தாபன சபையை சேர்ந்த ஒரு மனிதன் இருந்தான். நான் ஒரு சமயம் ஒரு சிறிய ஜெப கூட்டத்தில் இருந்தபோது, அவன் என்னை பிடித்து, ''நீங்கள் கர்த்தருடைய ஊழியக்காரனாக, தேவனுடைய மகிமைக்கென்று இருக்கும் பட்சத்தில், இங்கே ஒரு முடமான பெண் இருக்கிறாள், நான் என் சொந்த கண்ணால் அவருடைய மகிமையை காணும்படிக்கு, அவளை சுகப்படுத்தி, என் கண் முன்னால் எழுப்புங்கள், அப்பொழுது நான் அதை விசுவாசிப்பேன்", என்றார். 53.ஆனால், பாருங்கள், அவர் ஊழியக்காரனாக இருந்தாலும், அவர் இழக்கப்பட்டார். அவர் இழக்கப்பட்டார். சிலுவையை விட்டு இறங்கிவா, அப்பொழுது நாங்கள் விசுவாசிப்போம்" என்று கூறினதும் அதே ஆவிதான் என்று அவர் உணராமலிருக்கிறார். அந்த சமயத்தில், அங்கே அடுத்த அறையில் ஒரு பாவி உட்கார்ந்து இருந்தான். அவனை அழைத்து வந்து, அங்கே கொண்டு வந்தோம். இப்பொழுது, "ஐயா இங்கே இருக்கிற இந்த பரிதாபமான, பாவத்தில் இருக்கிற பாவியை தேவனுடைய மகிமைக்காக எடுத்து, அவனுடைய ஆத்துமாவை இன்றிரவு இரட்சியுங்கள், அவனை நீங்கள் இரட்சிப்பீர்களானால், நானும் அவளை சுகப்படுத்துவேன்", என்றேன். அது சரிதான். நீங்கள் இந்த நபரை இரட்சியுங்கள்; நானும் அந்த நபரை சுகப்படுத்துவேன். அது முடியாது. அது சரி. நிச்சயமாக. அவரால் அந்த மனிதனை இரட்சிக்க முடியாது, நானும் அந்த முடமான பெண்ணை சுகப்படுத்த முடியாது, ஆனால் இயேசுவால் அந்த மனிதனை இரட்சிக்க முடியும், அந்த பெண்ணை சுகப்படுத்த முடியும். அதுசரி. அப்படி செய்யும்படிக்கு மனிதனுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் நாம் அவருக்கு முழுமையாக நம்மை ஒப்புக் கொடுக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மூலமாக பேசி, தேவனுடைய வெளிப்பாடானது நம்முடைய உதடுகளின் மூலமாக புறப்பட்டு வருகிற வெறுமனே அவருடைய கருவிகளாக மட்டுமே நாம் இருக்கிறோம். 54.இங்கிருக்கும் ஊழியக்காரர்களில் அநேகர்; 'நான் ஒரு பிரசங்கத்தை வேகமாக பேசி, பொறிந்து தள்ளினேன்' என்று சொல்லிக் கொள்ள விரும்பமாட்டீர்கள். ஆனால் அதுதாமே தெய்வீக ஏவுதலினால் வந்தது என்று சொல்லவே விரும்புவீர்கள். அதை நான் விசுவாசிக்கிறேன். நிச்சயமாக. ஆம், நீங்கள் செய்தியை கொடுக்கும்படிக்கு உங்களை ஊக்கப்படுத்துகிற பரிசுத்த ஆவியினிடத்திலிருந்தே அது வர வேண்டியதாய் இருக்கிறது. அப்படி அது வராதபட்சத்தில், நீங்கள் ஒரு போதும் வெற்றியுள்ள செய்தியை கொடுக்கமுடியாது. இது சார்லஸ் ஃபின்னி, மற்றவர்களுடைய பிரசங்கங்களை பின்பற்றின ஒரு மனிதன்; ஆனால் அவன் எழுந்து பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் அதே செய்தியை முந்தின நாள் இரவில் பிரசங்கித்த போது, நூற்றுக்கணக்கானோர் பிரசங்க பீடத்தண்டை கொண்டு வரப்பட்டனர். பாருங்கள். அந்த இரண்டிற்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. அது தாமே ஏவுதலினால் வரவேண்டியதாய் இருக்கிறது. அந்த காரியத்தை பரிசுத்த ஆவியானவர் அபிஷேகிக்க வேண்டியதாயிருக்கிறது. தெய்வீக சுகமளித்தலின் காரியமும் அவ்விதமாய் இருக்கிறது. மக்கள் பரிசுத்த ஆவியினால் ஊக்கப்படுத்தப்பட்டு விசுவாசிக்கும்படிக்கு, ஏதோ காரியமானது தெய்வீக வரத்தினால் நடக்க வேண்டியதாய் இருக்கிறது. 55.இப்பொழுது, இயேசு தாமே இந்த இரவில் காட்சியில் வந்து, இங்கே வேதத்தில் அவர் செய்த அதே காரியங்களை அவரால் செய்து காட்ட முடியும் என்று அவருக்காக நான் விடும் சவாலை சத்தியம் என்று அவர் நிரூபிப்பார். நான் சத்தியம் என்றல்ல, ஆனால் அவரே சத்தியம் என்பதற்கு என்னை பிரதிநிதிப்படுத்துகிறேன். எந்த ஒரு மனிதனும் உங்களிடத்தில் வந்து, அவனுக்கு விருப்பமானதை கூறலாம். ஆனால் அதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் ஒரு மனிதன் ஒரு காரியத்தை உங்களிடத்தில் கூறி, தேவனும் அதற்கு செவி கொடுத்து அது சத்தியம் என்றும், அது தேவனுடைய வார்த்தையின்படி இருக்கிறது என்றும் நிரூபிக்கும்போது அதை விசுவாசிப்பது தான் உங்களுக்கு நல்லது. அப்படி செய்வது ஒரு நல்ல காரியமாய் இருக்கிறது. இப்பொழுது நாம் ஜெபிக்கும்போது தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. பிதாவே, இப்பொழுது நீண்ட நேரம் கிட்டத்தட்ட நாற்பது அல்லது நாற்பத்திஐந்து நிமிடங்கள் பேசியிருக்கிறேன். ஏனெனில் மக்கள் இங்கே இருப்பதற்கான நோக்கத்தை அவர்கள் பார்க்கும்படிக்கு முயன்று அவர்களிடத்தில் பேசியிருக்கிறேன். அவர்களுடைய நோக்கம் ஏதோ வேலைக்கு போகவேண்டும், மறுபடியும் இரவு வீட்டுக்கு திரும்பி, ஆகாரத்தை புசித்து, பின்னர் படுக்கைக்கு சென்று, அடுத்த நாள் காலையில் நாளிதழை வாசித்து, திரும்பவும் ஒவ்வொரு நாளும் வேலைக்கு போகவேண்டும் என்பது கிடையாது. அதே போல் ஞாயிறு காலையில் சபைக்கு சென்று, ஒரு பிரசங்கத்தை கேட்டு,வீட்டுக்கு திரும்பி, அடுத்த நாள் வேலைக்கு போகவேண்டும் என்பதும் கிடையாது. பிதாவே, நாங்கள் உம்முடைய கருவிகளாக இருக்கும்படிக்காகவே இங்கே இருக்கிறோம். அவர்களுடைய சரியான ஸ்தானத்தில் இருக்கும்படிக்கு அவர்களை நீர் மீட்டுக் கொண்டீர். சரியான சிந்தையில் இருக்கிற மனிதன் தேவனை எல்லாவற்றிலும் நம்புவான். 56.ஓ, பரலோகப் பிதாவே இன்றிரவு உம்முடைய பரிசுத்த பிரசன்னத்தினால் நீர் எங்களை ஊக்கப்படுத்தி; "உலகமோ என்னைக் காணாது, ஆகிலும் நீங்கள் என்னை காண்பீர்கள், ஏனெனில் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் உலகத்தின் முடிவு பரியந்தம் இருப்பேன்... என்று இந்த வாக்குத்தத்தத்தை கொடுத்த உம்முடைய குமாரன் கர்த்தராகிய இயேசுவை அனுப்பி, இன்றிரவு நாங்கள் விசுவாசிக்கும்படிக்கு செய்யவேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இங்கே இந்த அறையில் அமர்ந்திருக்கிற இந்த அன்பான ஜனக் கூட்டமானது, கர்த்தராகிய இயேசு தாமே அருகில் நிற்கிறார் என்று விசுவாசிக்கிறார்கள், ஏனெனில் அவர் அறியாமல் ஒரு தகைவிலான் குருவி கூட கீழே விழாது என்பதை அறிந்திருக்கிறார்கள். அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை, அவர் நிறைவேற்ற இங்கே இருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறபடியால், பிதாவே, இந்த பெலவீனமான நபரான என்னை, எதற்கும் தகுதியில்லாத பாத்திரமான என்னை உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கிறேன். கர்த்தாவே இன்றிரவு என்னுடைய ஒவ்வொரு குழாயையும் திறந்திடும், என்னுடையதை மட்டுமல்ல, ஆனால் இன்றிரவு இந்த கட்டிடத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் அப்படி செய்யும். அவர்களுடைய இருதயங்கள் துரிதமாக திறக்கட்டும். பரிசுத்த ஆவியானவர் தாமே அடுத்தடுத்து வரும் அலையைப் போல் அவருடைய மகிமையோடு வேகமாக வருவாராக. இயேசுவானவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து, இன்றிரவு நம் மத்தியில் நிற்கிறார் என்கிற உண்மைக்கு, மக்கள் விழித்துக் கொள்ளட்டும். 57.என்னை உம்மிடத்தில் ஒப்புக் கொடுத்து, நீர் இந்த பூமியில் இருந்தபோது செய்த அதே கிரியைகளை நீர் செய்யும்படிக்கு உம்மிடத்தில் கேட்டுக் கொள்கிறேன், இதை அளியும், கர்த்தாவே. தேவனுடைய வெளிப்பாட்டினால் வியாதியஸ்தர்களை பரிசுத்தப்படுத்தும். இன்றிரவு இவ்விதமாக நடக்கட்டும், எப்படியெனில் இங்கிருந்து மக்கள் வெளியே புறப்பட்டு வீட்டுக்கு செல்கையில், களிகூர்ந்து செல்வார்களாக. குருடர் பார்வையடையவும், செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும், சப்பாணிகள் நடக்கவும்... இப்பொழுது, யாரிடத்தில் 'து... வரிசை கொண்ட எண் இருக்கிறது. அவர்களில் சிலரை வரிசையில் கொண்டு வருவோம். இந்த சிறிய அட்டையின் பின்பக்கத்தை பாருங்கள். அந்த அட்டையின் பின் பக்கத்தில் ஒரு எண்ணும், 'து' வும் குறிப்பிட்டிருக்கும். யாரிடத்தில் 'து' அட்டை கொண்ட 1-ம் எண் இருக்கிறது. உங்களால் கையை உயர்த்த முடியுமானால், உங்கள் கையை உயர்த்துவீர்களா? யாரிடத்தில் எண்-2, எண்-3. எண்-2. சரி,இங்கே வரிசையில் நில்லுங்கள். எண்- 1, 2, 3. யாரிடத்தில் எண்-4 இருக்கிறது? அவர்களுடைய கையை உயர்த்தட்டும். 4, இங்கே இருக்கிற இந்த சீமாட்டியா? இங்கே வாருங்கள், சீமாட்டியே. எண்-5, யாரிடத்தில் எண்-5 இருக்கிறது? ஐயா, இங்கே வாருங்கள். எண்-6, யாரிடத்தில் எண்-6 இருக்கிறது? அங்கிருக்கும் சீமாட்டி. சரிதான். எண்-7? எண்-7?சரிதான் சீமாட்டியே. எண்-8, யாரிடத்தில் எண்-8 இருக்கிறது. ஜெப அட்டை எண்-8? சரிதான், சீமாட்டியே. எண்-9, யாரிடத்தில் எண்-9 இருக்கிறது? ஜெப அட்டை -9? ஐயா, உங்களிடத்தில் எண்-9 இருக்கிறதா? அப்படியானால் உதவிக்காரர்கள் அவர்களிடத்தில் சென்று, அவர்களுக்கு ஒரு நிமிடம் உதவுவீர்களா? எண்-10, யாரிடத்தில் ஜெப அட்டை எண் -10 இருக்கிறது. நண்பனே, நீங்கள் யாராயிருந்தாலும், உங்களுடைய கையை உயர்த்தி காட்டுவீர்களா? எண்-10? சரிதான், சீமாட்டியே. 11, யாரிடத்தில் ஜெப அட்டை எண்-10 இருக்கிறது. இங்கே இருக்கிறார், 11 சரிதான். எண்-12, நீங்கள் உங்கள் கையை உயர்த்துவீர்களா? எண்-12. அங்கிருக்கும் அந்த சீமாட்டி சரிதான். எண்-13, யாரிடத்தில் ஜெப அட்டை எண்-13 இருக்கிறது? உங்களால் முடியுமானால், உங்கள் கையை உயர்த்துங்கள். ஜெப அட்டை-13, யாராவது அதை வைத்திருப்பார்களானால், உங்களுடைய கையை உயர்த்துவீர்களா? அவர்களை தான் நான் பார்க்கிறேனா? 58.யாராவது உங்கள் பக்கத்தில் இருப்பவரை கவனியுங்கள், ஒருவேளை அவர் செவிடராக இருக்கலாம். யாராவது கையை உயர்த்தமுடியாமல், எழுந்திருக்க முடியாமல் இருப்பார்களானால், உங்களை சுற்றி இருக்கிற பக்கத்திலிருப்பவர்களை கவனித்து, அவருக்கு உதவி செய்யுங்கள். ஒரு வேளை யாராவது கை, கால் செயலிழந்து, எழுந்திருக்க கூட முடியாமல் இருக்கலாம். ஜெப அட்டை எண்-13, அது இங்கே இருக்கிறதா, உங்களில் யாராவது உங்கள் அட்டையை கவனியுங்கள், உங்கள் பக்கத்தில் இருப்பவர்களை அல்லது உங்களுக்கு அடுத்ததாக உட்கார்ந்திருப்பவர்களை கவனியுங்கள். அங்கே ஒரு சீமாட்டி கட்டிலில் இருக்கிறார்கள். சீமாட்டியே, அங்கிருக்கும் அவளுடைய எண்ணை நீங்கள் கவனிப்பீர்களா? அது எண் 13? சரிதான். 13, யாரிடத்திலும் எண்-13 இல்லையா? சரிதான். அட்டை எண்-14, யாரிடத்தில் 14 இருக்கிறது? ஜெப அட்டைஎண்-14 யாராவது வைத்திருப்பார்களானால், உங்கள் கையை உயர்த்தி காட்டமுடியுமா? 14? 15? ஜெப அட்டை எண்-15, உங்கள் கையை உயர்த்துவீர்களா? 16? ஜெப அட்டை16, உங்கள் கையை உயர்த்துவீர்களா? 17? சரிதான். 17, 18, உங்களுடைய கையை உயர்த்துவீர்களா? ஜெப அட்டை-18, யாரிடத்தில் ஜெப அட்டை 18 இருக்கிறது, உங்களுடைய கையை உயர்த்துவீர்களா? இப்பொழுது கவனியுங்கள், நான் அந்த எண்களை அழைக்கும் போது, ஒரு வேளை யாராவது எழுந்திருக்க முடியாமல் இருக்கலாம். ஒருவேளை யாராவது செவிடராக இருந்து, கேட்க முடியாமல், தங்களுடைய எண்ணை எப்பொழுது அழைத்தார்கள் என்று கூட அறியாமல் இருக்கலாம். 18, 19, யாராவது ஜெப அட்டை 19 வைத்திருக்கிறீர்களா? உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? ஜெப அட்டை 18, 19, 20 ஒருவேளை நான் இன்னும் அதிகநேரம் எடுத்துக் கொண்டிருக்கலாம்... சரி, ஐயா, சரி. 59.இப்பொழுது, நாம் இங்கே ஒரு சில நிமிடங்களுக்கு காத்திருப்போம். இன்னும் ஒரு சில பேரை, ஒரு சில நிமிடங்களுக்கு நாம் அழைக்கலாம். அந்த சமயத்தில் அந்த எண்களை, அதை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா என்று கவனித்து பாருங்கள். அவர்கள் வருவார்களானால், அது 13, 18, மற்றும்19 என்று நான் விசுவாசிக்கிறேன். இது 20? 20?. சரிதான், அவர்கள் வருவார்களானால், சரி, அவர்கள் வெளியில் இருப்பார்களானால் அவர்களை வரிசையில் வரும்படிக்கு செய்யுங்கள். இப்பொழுது அங்கே வெளியே எத்தனை பேர் வியாதியஸ்தர்களாயும், ஜெப அட்டை இல்லாமலும், ஜெப அட்டையை பெற்றுக் கொள்ள முடியாததால் ஜெப அட்டை இல்லாதவர்களாயும் இருந்து தேவன் உங்களை சுகப்படுத்த வேண்டும் என்று இருக்கிறீர்களா, நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வெறுமனே உங்கள் கரங்களை உயர்த்துங்கள், அவ்வளவு தான். சரி. 60.இப்பொழுது, என் நேச நண்பனே. உன்னிடத்தில் நான் ஒரு காரியத்தை கூறுகிறேன். நீங்கள் மட்டும் இதை செய்வீர்களானால், நீங்கள் மட்டும் இங்கிருக்கும் சகோதரன் பிரான்ஹாம் ஆகிய என்னை மறந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இங்கே உங்களுடன் இருக்கிறார் என்றும், நான் வெறுமனே உங்களுடைய சகோதரன் என்பதையும் விசுவாசிப்பீர்களானால்... கர்த்தராகிய இயேசு இங்கே இருக்கிறார் என்று மட்டும் விசுவாசியுங்கள், நீங்கள் அமர்ந்து இதை செய்யுங்கள். எனக்காக இதை செய்வீர்களானால்... நீங்கள் அமர்ந்து இதை மட்டும் சொல்லுங்கள், "கர்த்தராகிய இயேசுவே, நான் உண்மையிலேயே இது சத்தியம் தான் என்பதை விசுவாசிக்கிறேன். இந்த மனிதன் கூறினதை சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன், ஏனெனில் அதை அவர் உம்முடைய வேதத்திலிருந்து படித்து காட்டியிருக்கிறார், அதை நான் சத்தியம் என்று விசுவாசிக்கிறேன். இப்பொழுது, கர்த்தாவே, அந்த மனிதனுக்கு என்னைத் தெரியாது என்று எனக்குத் தெரியும், ஆனால் உதிரப் போக்கினால் அவதிப்பட்ட அந்த பெரும்பாடுள்ள ஸ்திரீயினிடத்தில் அல்லது எரிகோ வாசலண்டை அமர்ந்திருந்த குருடனான பார்த்திமேயுவினிடத்தில் நீர் அல்லது அவர் திரும்பி 'உன் விசுவாசம்உன்னை இரட்சித்தது' என்று கூறினது போல, இவரை என்னிடத்தில் திரும்பி; எளிமையும் தகுதியற்ற இந்த நபருக்குள் இருக்கும் கர்த்தராகிய இயேசுவைக் கொண்டு நீங்கள் என்னிடத்தில் பேசுவீர்களானால்... எனவே அவர்தாமே உம்மை பிரதிநிதிப்படுத்தும்போது, நான் உங்களிடத்தில் ஜெபித்து, இதை கேட்கப் போகிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன் மற்றும் நான் சுகமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் இந்த இரவில் அந்த மனிதனை என் பக்கமாக திரும்பச் செய்து, நான் அறிந்து கொள்ள வேண்டியதை அல்லது அவ்விதமான ஏதோ ஒன்றை எனக்கு கூறும்படிக்கு, எனக்கு போதுமான விசுவாசத்தை கொடுக்கும்படிக்கு உம்மிடத்தில் கேட்டுக் கொள்கிறேன். எனவே அவ்விதமான ஏதோ ஒரு அடையாளத்தையோ அல்லது அவ்விதமான ஏதோ ஒன்றை பெற்றுக் கொள்ளும்படிக்கு நீங்கள் அதை செய்து, தேவனிடத்தில் ஜெபியுங்கள். 61.இப்பொழுது நமக்கு அடையாளங்கள் அவசியம் இல்லை. நினைவில் கொள்ளுங்கள், பெலவீனமான மற்றும் விபச்சார சந்ததியார் அடையாளத்தை நாடி தேடுகிறார்கள். ஆனால் நண்பர்களே, நாம் இயற்கைக்கு மேம்பட்ட (Supernatural) காரியத்திலிருந்து விலகிபோகின்ற அளவுக்கு நாம் அவ்வளவான கல்வியறிவை பெற்றிருக்கிறேம். அது சரி. இயேசு, ''விசுவாசிக்கிறவர்களுக்கு இந்த அடையாளங்கள் பின் தொடரும்", என்று கூறியிருக்கிறார். நாம் அடையாளங்களை தேடவில்லை, ஆனால் தேவன் எப்பொழுதும் அடையாளங்களை காண்பிக்கிறவராய் இருக்கிறார்; துவக்கம் முதலே ஆதியாகமம் தொடங்கி வெளிப்பாடு வரைக்கும், வேதாகமத்தில் சபை காலங்களில் தொடர்ச்சியாக அடையாளங்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது, எங்கே அடையாளங்கள் இல்லையோ அங்கே தேவன் இல்லை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு தெரியும், வேதாகமத்தில் எப்படியாக இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறதென்று; பிதாவானவர் எந்த வொன்றையும் அவருக்கு காண்பிக்காமல் அவர் எந்தஅற்புதங்களையும் செய்ததில்லையென்றும், எவ்விதமாக அங்கே கிணற்றண்டை வந்த ஸ்திரீயினிடத்தில், 'உனக்கு எத்தனை புருஷர்கள் இருக்கிறார்கள் என்று கூறினபோது',அது அந்த ஸ்திரீயை திடுக்கிட வைத்ததென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 62.வேதாகமத்தில் அந்த அடையாளங்களை நடப்பித்த அதே கர்த்தராகிய இயேசு இன்று இரவு இங்கே வந்து, அது சத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டுவாரானால், நீ அவரை உன்னுடைய தேவனாகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொள்வாயா? நீ அவரை விசுவாசிப்பாயானால், உன் கரத்தை உயர்த்தி, ''அப்பொழுது நான் அவரை விசுவாசிப்பேன்", அது திரும்பவும் நடப்பிக்கப்படுவதை நான் காண்பேனென்றால், நான் என்னுடைய எல்லா சந்தேகங்களையும் தூக்கி எறிந்துபோட்டு, அவரை விசுவாசிப்பேன் என்று சொல். இப்பொழுது அதினிமித்தமாக, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, கவனியுங்கள் கடந்த இரவு இந்தியாவைப் பற்றி நான் உங்களுக்கு கூறினேன். அது எப்பேற்பட்ட சவாலாக இருந்தது என்று இப்பொழுது கவனியுங்கள். அந்த கூட்டத்தில் அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கும்படிக்கு நான் கர்த்தரிடத்தில் காத்திருந்தேன். அதற்குப் பிறகு அந்த சவாலை கவனித்தேன். அது ஏதோ அவருடைய சவால் என்பதல்ல... ஆனால் அதுதாமே தேவன் நம்மிடத்தில் ஏதோ ஒன்றை செய்யும்படிக்கு கூறும்போது, அதை நாம் விசுவாசிப்பதாகும். 63.நாம் இந்த வேதாகமம் சத்தியம் என்பதை விசுவாசிக்கிறோம். ஆனால் நாம் அதை அத்து மீற கூடாது... அதை செய்யும்படிக்கு என்னுடைய வல்லமையின் கட்டுப்பாட்டுக்குள் அது இல்லை; மற்றும் எந்த மனிதனுடைய வல்லமைக்குள்ளாகவும் அது இல்லை. ஆனால் அது தேவனுடைய வல்லமையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தேவன்தாமே ஒருவனுக்கு விசுவாசத்தை கொடுக்கும்படிக்கு ஏதோ ஒரு வழியில் அந்த நபருக்கு அவரை வெளிப்படுத்த வேண்டியதாயிருக்கிறது. இதோ அவருடைய வார்த்தை கூறுகிறது, 'அவர் உன்னை சுகப்படுத்துவார்' என்று கூறுகிறது. அவர் உன்னை சுகப்படுத்திவிட்டார் என்று அதை உனக்கு அவர் வெளிப்படுத்துவாரானால், நீ இந்த ஜெப வரிசையில் வரமாட்டாய். அது உனக்கு அவசியமுமில்லை. அது ஏற்கனவே முடிந்து போனதாயிருக்கிறது. அதை அவர் உனக்கு செய்வார் என்று அதை அவர் உனக்கு வெளிப்படுத்தியிருக்கும்போது, அந்த தேவனுடைய வெளிப்பாட்டை காட்டிலும் வேறு ஒன்றும் உனக்கு அவசியப்படாது. இப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கிருக்கிற அந்த பியானோ வாசிக்கும், என்னுடைய சகோதரர், அவர் மெதுவாக இந்த ''நம்பிடுவாய்" என்ற சிறிய பாட்டை வாசிப்பாராக. உமக்கு நன்றி. இப்பொழுது, நாம் ஒரு சில நிமிடங்களுக்கு அமைதலாய் இருப்போமாக. 64.வழக்கமாக ஜெப வரிசையானது... எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று எனக்கு தெரியாது. நான் உங்களுக்கு ஏற்கனவே கூறினதுபோல அவசரகதியில் நான் சிக்காகோவை விட்டு போக வேண்டும் என்று இல்லை. நான் இங்கே தரித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தேவன் ஏதோ ஒரு காரியத்தை சிக்காகோவில் வைத்திருக்கிறார். இங்கே இருக்கிற இந்த பிரசங்கியார் இருபது வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தடவையும் நான் இங்கே வரும்போது, ஏதோ வினோதமான காரியம் இங்கே அசைவாடுவதை உணர்ந்திருக்கிறேன். அது என்னவென்று எனக்கு தெரியாது. அதை நான் கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கர்த்தருக்கு சித்தமானால், அவர் என்னை வழிநடத்துமட்டும் நான் இங்கே தரித்திருக்க விரும்புகிறேன். இப்பொழுது, கர்த்தாவே, இதோ இங்கிருந்து நாங்கள் ஆராதனையை துவங்குகிறோம், பிதாவே, நேற்றைய இரவு சற்று அதிக நேரம் ஆகிவிட்டது. எனினும் நாங்கள் துரிதமாக போக விரும்பவில்லை, மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து, காத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் இங்கே இருப்பதற்கான காரணம் நாங்கள் உம்மை நேசிப்பதினால் தான். அந்த காரணத்தினால்தான் நாங்கள் இங்கே காத்துக் கொண்டிருக்கிறோம், பிதாவே. உம்முடைய ஊழியக்காரன் பேசுவதினிமித்தமாக அல்ல, ஆனால் உம்முடைய ஆவி இங்கே அவர்கள் மேல் இருப்பதினிமித்தமே. அதுதான் அவர்களை ஈர்த்து, பிடித்து வைத்திருக்கிறது. 65.பிதாவே, எங்களில் ஒவ்வொருவரும், திரைக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை அறியும்படிக்கு, முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஏதோ ஓரிடத்திலிருந்து வந்திருக்கிறோம் என்று எங்களுக்கு தெரியும். அவ்விதமே ஏதோ ஓரிடத்திற்குபோகிறோம் என்பதையும் நாங்கள் அறிவோம். அதைக் குறித்து நாங்கள் அதிகம் தெரிந்து கொள்ளவிரும்புகிறேம். பிதாவே, தயவுகூர்ந்து நீர், அதை இன்றிரவு எங்களுக்கு வெளிப்படுத்துவீரா? இங்கே உம்மைதாமே வெளிப்படுத்தும். அந்நாளில் நீர் அப்பத்தை எடுத்து பிட்டது போலவே, இன்றிரவும் ஏதோ ஒன்றை நீர் எடுத்து அவ்விதமே செய்யும் அப்பொழுது மக்கள் அது அதே இயேசுதான் என்பதை அறிந்து கொள்வார்களாக. அங்கே அவ்வேளையில் எம்மாவூரில் இருந்த சீஷர்கள், அந்நேரத்தில் நீர் அப்பத்தை உடைத்த விதத்தை பார்த்தபோது, அவ்விதமாக அப்பத்தை உடைக்க உம் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை அறிந்து கொண்டார்கள். இன்றிரவும் இந்த கட்டிடத்தில், அந்த வழியில் அதை நீர் திரும்பவும் செய்வீரா? நீர் இந்த பூமியில் இருந்தபோது செய்தது போலவே ஏதோ காரியத்தை நீர் செய்யும், அப்பொழுது நாங்கள்அப்படி செய்ததற்காக உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம், பிதாவே. 66.இப்பொழுது, இந்த தெய்வீக வரமானது உம்மால் கொடுக்கப்பட்டு, மற்றும் ஒரு தூதனால் எனக்கு கட்டளையிடப்பட்டு... இந்த வரத்தின் மூலமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பிரஸ்தாபமாக்கும்படிக்கு என்னை உம்முடைய கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன். இதை அவருடைய நாமத்தில் கேட்கிறேன், ஆமென். இவ்வித உணர்வோடு ஒரு கூட்டத்துக்கு வருவதை நான் விரும்புகிறேன். அவர் சரியாக இப்பொழுது இங்கே இருக்கிறார். ஓ, எப்பேற்பட்ட ஒரு உணர்வு. ஓ, எப்படியாக நான் இதற்கு ஏங்கினேன். நான் திரும்பி வந்த பிறகு இதுவே முதல் முறையாக... இப்பொழுது, ஒவ்வொருவரும் உண்மையிலேயே பயபக்தியோடு இருங்கள். விசுவாசத்தில் நிலைத்திருங்கள். தொடர்ந்து விசுவாசியுங்கள். இந்த வழியாக கவனியுங்கள். இந்த மாலையில் தேவன் ஏதோ காரியத்தை செய்யப் போவதை நான் உணர்கிறபடியால், சகோதரன் ஜோசப்பும், நீங்களும், பில்லியும், நீங்கள் எல்லோரும் நேரத்தை கவனியுங்கள். அவருடைய ஆவி..... 67.கடந்த இரவின் போது மனுஷீகம், வெளிப்பாடு, தரிசனம் பற்றி நினைவு கூருங்கள். இதுதான் நம்பிக்கை. இது தான் விசுவாசம் மற்றும் இது தான் பரிபூரணம். கர்த்தர் உரைக்கிறதாவது. சரியாக இப்பொழுது இந்த சூழ்நிலையில் தேவன் ஏதோ காரியத்தை செய்யப்போவதாக நான் உணர்கிறேன். ஏதோ காரியத்தை குறித்து நான் அருமையாக உணர்கிறேன். அது என்னவென்று எனக்கு தெரியவில்லை, ஆனால் அவர் ஏதோ காரியத்தை செய்யப் போகிறார் என்பதை நான் உணர்கிறேன். அவருடைய ஆசீர்வாதங்கள் இப்பொழுது நம்மிடத்தில் வருவதாக. இப்பொழுது உங்களுடைய சகோதரனாகிய நான், என்னைத் தாமே அப்பேற்பட்ட ஒரு கருவியாக பரிசுத்த ஆவிக்கு ஒப்புக் கொடுக்கவும், அதினிமித்தம் அவர் வந்து இந்த சரீரத்தை எடுத்துக் கொண்டு அவருடைய நேச குமாரனை பிரதியட்சமாக்கும்படிக்கு எனக்காக ஜெபியுங்கள். எப்பேற்பட்ட சிலாக்கியம். எவ்வளவேனும் தகுதியில்லாத; இருப்பினும் யார் தகுதியுள்ளவர்களாக இருக்க முடியும். எதையும் எதிர் பார்க்காத கிருபையே, இயேசுவின் இரத்தம் அவ்விதமாக நம்மை ஆக்குகிறது. இப்பொழுது, நான் ஜெபிக்க வேண்டிய சீமாட்டி இவர்கள்தான் என்று நான் விசுவாசிக்கிறேன். அது சரிதானே, சீமாட்டியே? நீங்கள் இங்கே வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். 68.இப்பொழுது, இங்கே ஜெப அட்டையைப் பெற்று, வரிசையில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் நான் கூறிக்கொள்வது; நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், பயபக்தியோடும் அதை விசுவாசிக்காத பட்சத்தில், நீங்கள் இந்த ஜெப வரிசையில் வரவேண்டாம். இதை நினைவு கூருங்கள். ஏனெனில் அதன் பிறகு உங்களுக்கு அது ஏதோ ஒரு கோரமான காரியமாக மாறிவிடும். எனவே நீங்கள் விசுவாசியுங்கள். நீங்கள் அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது, இங்கிருக்கிற இந்த பொறியாளரால் கூடுமானால், ஒலியின் அளவை உயர்த்தும்படிக்கு அவரை நான் கேட்டுக் கொள்கிறேன். இங்கே இந்த தரிசனமானது அசைவாடத் துவங்கியவுடன், எவ்வளவு சத்தமாக நான் பேசுகிறேன் என்று எனக்குத் தெரியாது. அவ்விதமாக நான் போகும் பட்சத்தில், உங்களில் சிலர் என்னை ஒரு விதமாக தள்ளவோ அல்லது குத்தவோ செய்யுங்கள். காரணம் இப்பொழுது இங்கே இந்த ஸ்திரீ நின்று கொண்டிருக்கிறாள் என்று எனக்கு தெரியும். நீங்கள் பேப்பரில் பார்த்த கர்த்தருடைய தூதனானவரின் படம்... கொஞ்ச நாட்களுக்கு பிறகு அப்படங்களில் சில நமக்கு கிடைத்தது. அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். இப்பொழுது, நீங்கள் என்னிடத்தில் வரும்போது, ஜெப வரிசையில் வரும்படிக்கு விரும்புகிறேன். வெறுமனே நீங்கள் வந்து, நான் கேட்கிற கேள்விகளை கவனித்து பதில் சொல்லுங்கள். நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள். அதற்கு பிறகு நீங்களே உங்களுக்கு தீர்ப்பை கொடுக்கிறவர்களாய் இருப்பீர்கள். 69.இப்பொழுது, இங்கே எனக்கு முன்பாக நிற்கிற இந்த சீமாட்டி எனக்கு முற்றிலும் புதியவளாக இருக்கிறாள். அவளை நான் அறியேன். ஒருவேளை நான் என் ஜீவியத்தில் உன்னை பார்த்திராமல் இருக்கலாம். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம். அப்படித்தானே? நாம் அந்நியர்களாயிருக்கிறோம். இப்பொழுது, என் சகோதரியே, நான் உம்மை சந்திக்கும் இடத்திற்கு வரும்படிக்காகவே, நான் உம்மிடத்தில் இதை கூறுகிறேன். இன்னொரு வார்த்தைகளில் சொல்லப்போனால் அங்கே ஏதோ காரியம் நடந்து கொண்டிருக்கிறது. அதை என்னால் விவரித்து கூறமுடியாது. அது ஏதோ இயற்கைக்கு மேம்பட்ட காரியமாயிருக்கிறது. அதை நான் அறிந்து கொள்வதற்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. ஆனால் எப்படியோ ஏதோ காரியம் உமக்கு நிகழ வேண்டியதாய் இருக்கிறது. எனக்கு ஏதோ காரியம் நடந்திருக்கிறது. இப்பொழுது, நீங்கள் நம்முடைய இரட்சகராகிய ஆண்டவருடைய பிரசன்னத்தில் நிற்பீர்களானால், பிதாவானவர் உங்களுடைய காரியத்தை அவருக்கு வெளிப்படுத்தும்போது, நிச்சயம் உம்முடைய தொல்லை என்னவென்றும், நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பதையும் அவர் கச்சிதமாக அறிவார். அது சரிதானே? அவரால் அதை சொல்ல முடியும். ஆனால் அவரால்... இப்பொழுது நான் இதை சொல்லக் காரணம், ''நான் பேசும்போது எனக்கு நீங்கள் பதிலளித்தால் போதும்", ஏனெனில் சில சமயங்களில் தரிசனமானது போய்க் கொண்டிருக்கும் போது நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நான் அறியாமலிருக்கிறேன். அதை அன்றொரு நாள் ஒலிநாடாவில் கேட்டுக் கொண்டிருக்கும்போது அதை கண்டுபிடித்தேன். மக்கள் ஏதோ காரியத்தை கூறவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நான் அறியாமலிருந்தேன். நான் தரிசனத்தில் இருக்கும்போது, தொடர்ந்து நான் பேசிக்கொண்டிருந்தேன். ஏனெனில் அது (தரிசனம்) என்னை எங்கேயோ கொண்டு செல்கிறது மற்றும் நான் அதை பார்க்கும்போது அதை நான் கூறியாக வேண்டும். அதன் பிறகு நான் அதிலிருந்து திரும்பி வருவேன். நீங்களே அதை நிதானிக்கலாம். 70.எனவே உம்முடைய ஜீவியத்தில் உள்ள ஏதோ காரியத்தை அவர் கூறுவாரானால், அது உண்மையா அல்லது உண்மையில்லையா என்பதை நீங்கள் தான் அறிவீர்கள். எனக்கு அது தெரியாது. ஆனால் அவர்தாமே இங்கே இயற்கைக்கு மேம்பட்ட வழியில் இருந்து, உன் ஜீவியத்தில் என்னவாயிருந்தீர்கள் என்பதை அறிந்து, அதை கூறும்போது, அதுதாமே உண்மையாய் இருக்கும்பட்சத்தில், சொல்லப்பட்டதும் உண்மையாயிருக்கும். அது சரிதானே? இப்பொழுது, அதை அவர் செய்வாரா அல்லது இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இப்பொழுது நான் உம்மிடத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது இதை கவனித்தீரா, ஏனெனில் இங்கே இருக்கிற விசுவாசிகள் அதை புரிந்துகொள்ள... ஒரு சமயம் இயேசு தனக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கும்படிக்கு ஒரு ஸ்திரீயை அழைத்தார். ஒரு நோக்கத்திற்காக அவளிடத்தில் பேசும்படிக்கு அவளை அழைத்தார். நீண்ட நேரம் அவளிடத்தில் பேசிக்கொண்டிருந்த பிறகு, நேரிடையாக விஷயத்திற்குச் சென்றார். அவர், ''நீ போய் உன்னுடைய புருஷனை அழைத்துவா", என்றார். அவள், ''எனக்கு எந்த புருஷனும் இல்லை", என்றாள். அங்கே தான் அவளுடைய பிரச்சனையே இருந்தது. அவர், ''உனக்கு ஐந்து புருஷர் இருந்தார்கள்", என்றார். அதற்கு அவள், ''உண்மையிலேயே, நீர் ஒரு தீர்க்கதரிசி", என்றாள். 71.அவள் அவரிடத்தில், ''மேசியா வரும்போது, இப்படிபட்ட காரியங்களை அவர் பேசுவார் என்று எனக்கு தெரியும்", என்றாள். ஆனால் யார் இவர்? அவள், ''நீர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கவேண்டும்", என்றாள். எனவே, கவனியுங்கள், ''இருதயத்தின் இரகசியங்களை அறிந்துகொள்வது அது ஒரு மேசியாவின் அடையாளமாயிருக்கிறது". ஜனமே, அது சரிதானே? (சபையார் ''ஆமென்" என்கிறார்கள்) கிணற்றண்டை இருந்த ஸ்திரீ, ''மேசியா வரும்போது, அவர் இப்படிப்பட்ட காரியங்களை அறிந்து கொள்வார். எங்களுக்கு தெரியும் மேசியா வரும்போது..." அது ஒரு அடையாளம் அவருடைய பிரசன்னம் இருக்கிறது என்பதற்கான மேசியாவின் அடையாளம் என்றும் அல்லது மனதைப் படிக்கிறவர் என்று அழைக்கிற இவர்களுக்கு என்ன சம்பவிக்கும்? எனக்குத் தெரியாது. அவளைக் குறித்து ஏதோ காரியத்தை அறிந்து கொள்ளும்படிக்கு அவளிடத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தார். 72.இப்பொழுது, எனக்கு உங்களைத் தெரியாது, உங்களுக்கும் என்னைப் பற்றித் தெரியாது, இருப்பினும் பரிசுத்த ஆவியானவர் இங்கே வந்து நீங்கள் உண்மை என்று அறிந்திருக்கும் ஏதோ காரியத்தை (அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது), உங்களுக்கு வெளிப்படுத்துவாரானால், அப்பொழுது ஏதோ ஒரு வழியில் உங்களைக் குறித்து நான் அறிந்திருக்கிறேன் என்று நீங்கள் கூறுவீர்கள். அது சரிதானே? அப்படியானால் அதுதாமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்கள். அதே காரியத்தை இங்கிருக்கும் ஜனம் விசுவாசிக்குமா? நீங்கள் விசுவாசிப்பீர்களானால், உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? அதை அவர் உனக்கு அளிப்பாராக என்பதே என் ஜெபமாயிருக்கிறது. நான் இங்கே நிறுத்தி அல்லது காத்துக் கொண்டிருப்பதை குறித்து நீங்கள் ஆச்சரியப்படலாம். என்னை சுற்றிலும் முழுவதும் இருப்பது ஆவியே (spirit). பொதுவாக நான் தனியாக ஒரு நோயாளியை, அவர்களாகவே வரும் பட்சத்தில், அப்பொழுது அது வித்தியாசமாயிருக்கும். ஆனால் இங்கே சரியாக எனக்கு பின்னாக ஒரு வரிசையே ஒரு முழு கூட்டமே நின்றுக் கொண்டிருக்கிறது, இங்கே சுற்றிலும் எவ்விடத்திலும் அவர்கள் யாவரும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் என்னை சுற்றிலும், எனக்கு பின்னாகவும், எவ்விடத்திலும் இருக்கிறார்கள். இங்கே எவ்விடத்திலும் ஆவிகள் இருக்கிறது. 73.ஒரு வேளை நான் இந்த வழியில் பார்க்கும்போது, இங்கே உட்கார்ந்திருக்கும் வேறொருவரை நான் பார்க்க நேரிடலாம். பாருங்கள் அது வித்தியாசமாயிருக்கிறது. எனவே அது தேவன் தாமே தன்னுடைய ஏகாதிபத்திய கிருபையைக் கொண்டு செய்கிற காரியமாயிருக்கிறது. எனவே, அது தனக்குதாமே அதை கட்டுக்குள்ளாக வைத்துக் கொண்டிருக்கிறது. அதை நான் கட்டுப்படுத்து முடியாது. ஆனால் நான் பார்ப்பது... இந்த ஸ்திரீக்கு அருகில் ஒரு மனிதன் நிற்கிறதை நான் பார்க்கிறேன். அவன் ஒரு நோய்வாய்ப்பட்டவன். அவன் உன்னுடைய புருஷன் அல்ல. அவன் உங்களுடைய குடும்ப நண்பன். அவன் வெறுமெனே ஒரு நண்பன். அந்த மனிதன்ஒரு கிறிஸ்தவன். அவன் ஆயத்தமாவதை அல்லது ஒரு மருத்துவர் அவனை பரிசோதித்து, அவனுக்கு வாய் மூலமாக ஏதோ குடிக்கும்படிக்கு கொடுக்கிறார். அது அவன் வாய்க்குள் போகிறது. அவனுக்கு வயிற்றுப் புண் உள்ளது. அவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும்படிக்கு, அவன் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாகிறான். எனவே, அவன் சுகமடையும்படிக்காக அவனுக்காக இங்கே நீ வந்திருக்கிறாய். நான் கூறின இந்த காரியங்கள் யாவும் உண்மை. அவை உண்மைதானே? அவை உண்மையாயிருக்கும் பட்சத்தில், உன்னுடைய கரத்தை உயர்த்துவாயாக. உன்னுடைய தேவை என்னவென்றும், அது இன்னொருவருக்காக நீ வந்திருக்கிறாய் என்பதையும் கர்த்தராகிய இயேசு அறிந்து இங்கே இருக்கும் பட்சத்தில், அவர் உன் வேண்டுதலை உனக்கு அளிப்பார். அவர் மரணத்திலிருந்து உயிர்தெழுந்தார் என்று இப்பொழுது நீ விசுவாசிக்கிறாயா? அப்பொழுது அவருக்கு இருந்த வல்லமை, இன்றைக்கும் இருக்கிறது. அதே காரியத்தை கூட்டத்தார் விசுவாசிக்கிறீர்களா? 74.எங்கள் பரலோகப்பிதாவே, கிறிஸ்தவ அன்பினிமித்தம் இன்னொருவருக்கு பதிலாளாக இங்கே அவள் நின்று கொண்டிருக்கும்போது, உம்முடைய பிரதிநிதியாகிய நான் அவள் மீதாக என் கரங்களை வைக்கிறேன். நீர் கூட எங்கள் எல்லோருக்கும் பதிலாளாக நின்றீர். ஒரு பாவியாக நாங்கள் மரிக்க வேண்டிய இடத்தில் நீர் மரித்தீர். ஒரு சுகமளிப்பவராக எங்கள் வியாதியை நீர் ஏற்றுக் கொண்டீர். மேலும் பிதாவே, சாவாமையுள்ள ஜீவியம் உண்டு என்பதை ஒரு நாளில் உம்முடைய உயிர்த்தெழுதலில் அதை நிரூபித்தும் காண்பித்தீர். அதற்காக உமக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஸ்திரீயானவள் எந்த நபருக்காக வந்திருக்கிறாரோ அந்த நபரிடத்தில் அவள் திரும்பிப் போகும்போது, அந்த நபர் மரிக்காமல், உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் சுகத்தை பெற்றுக் கொள்ளும்படிக்கு இவளை நான் ஆசீர்வதிக்கிறேன். ஆமென். உன்னுடைய நண்பனிடத்தில் சொல்... இப்பொழுது உன் கையில் உன்னுடைய கைக்குட்டையை வைத்திருக்கிறாய். நீ அந்த கைக்குட்டையை எடுக்கும்போது, அதை அவர் மேல் வை. இந்த ஜனமானது சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமைகளினால் எப்படியாக அசைக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. இன்னுமாக இப்படிப்பட்ட காரியங்களில் நாம் சலனமில்லாமல் அமர்ந்திருப்பது எவ்வளவு விநோதமாக உள்ளது 75.முன்புக்கு வாருங்கள், சீமாட்டியே, உங்களால் முடியுமா? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். அப்படி இல்லையா? எனக்கு உங்களை தெரியாது. என்னுடைய ஜீவியத்தில் நான் உங்களை பார்த்ததில்லை. இருப்பினும், இதோ இன்றிரவு இங்கே நீங்கள் நின்றுக் கொண்டிருக்கிறீர்கள், நானும் உங்களுக்கு முன்பாக நிற்கிறேன். ஆக நாம் இருவரும் நம்முடைய பிதாவாகிய சர்வ வல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னத்தில் நின்றுக் கொண்டிருக்கிறோம். நான் அவருடைய ஊழியக்காரனென்றும், இங்கிருக்கிற இந்த எல்லா ஜனங்களும் அவருடைய ஊழியக்காரர்களாய் இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நாம் எல்லோரும் கிறிஸ்தவர்களாய் இருக்கிறோம். இந்த மகத்தான காணக்கூடாத கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய, இந்த கிறிஸ்தவ ஜனம் இங்கே கூடிவந்திருக்கிறதென்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் ஒரு கிறிஸ்தவர்களாயிருக்கிறீர்கள். யாரோ ஒருவர் படுத்துக்கிடப்பதை நான் பார்க்கிறேன். அது ஒரு ஸ்திரீ, அவள் விழுந்து கிடக்கிறாள். உமக்கு ஏதோ ஒரு விதமான மயக்க நிலை ஏற்பட்டு அதினிமித்தம் சுய நினைவிழந்து அல்லது முற்றிலும் சுயநினைவற்றவளாய் இருளடைந்து போகிறீர்கள். நான் ஏதோ ஒன்றை பார்க்கிறேன்... அது ஒரு மருத்துவர் அல்லது ஏதோ ஒன்றிற்க்குள் நீங்கள் கடந்து போகிறீர்கள். அது ஒரு திரைச்சீலை கதவாய் இருக்கிறது அதை நீங்கள் கடந்து போகும் போது உங்களுடைய கணுக்கால், இடது கணுக்காலில் காயம் ஏற்படுகிறது. அது உன்னுடைய கணுக்காலில் இருக்கும் ஜவ்வை (ligament) கிழித்துபோட்டது, அவர்களாலும் அதை சுகப்படுத்த முடியவில்லை. நான் மட்டும் இங்கே இருக்கும் இந்த மேடைக்கு போவேனேயாகில் இயேசு கிறிஸ்துவால் என்னை சுகப்படுத்த முடியும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மைதான். அப்படியானால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். 76.நீங்கள் அவருடைய தெய்வீக பிரசன்னத்தில் இருக்கிறீர்கள் என்பதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் ஒருவேளை நான் அவருடைய ஆவியினால் அவ்வளவாக அபிஷேகம் பண்ணப்பட்டு, நீங்களும் தேவனும் மட்டுமே அறிந்திருந்து, வேறு எவரும் அறிந்திராத காரியங்களை நான் உங்களுக்கு தெரிவிப்பேனென்றால், அது உங்களை ஒரு விசுவாசியாக மாற்றும். அது சரிதானே? அவர், ''விசுவாசிக்கிறவர்களுக்கு இந்த அடையாளங்கள் பின் தொடரும். பிணியாளிகள் மீது அவர்கள் கரங்களை வைக்கும் போது அவர்கள் சுகமடைவார்கள்" என்று கூறியிருக்கிறார். அது உண்மை தானே? ஆகவே நீங்கள் உங்களுடைய சுகத்துக்காக இங்கே வாருங்கள். ஓ தேவனே, எங்கள் பிதாவே, வானத்தையும் பூமியையும் படைத்தவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நல்ல ஈவையும் அளிப்பவரே, என்னுடைய சகோதரியின் விசுவாசத்தையும் உம்முடைய வார்த்தையiயும், உம்முடைய குமாரனின் உயிர்த்தெழுதலையும், உம்முடைய பிரசன்னம் எங்களோடு இருக்கிறது என்ற இந்த தகுதிகளின் மேலாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவள் சுகமடையும்படிக்கு நான் உரைக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரியே. 77.இப்பொழுது விசுவாசியுங்கள். உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள். சீமாட்டியே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் என்று நினைக்கிறேன். தேவன் உன்னை அறிவார், உன்னைப் பற்றி எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். எனக்கு உங்களைப் பற்றி தெரியாது, ஆனால் ஏதோ காரியம் நடக்கிறது என்பதை குறித்து மட்டும் நீங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் முதன் முறையாக வந்தபோது நீங்கள் நினைத்ததைக் காட்டிலும் சற்று வித்தியாசமாயிருக்கலாம். ஆனால் அவருடைய பிரசன்னம், அதுதாமே இவ்விதமான காரியங்களைச் செய்கிறது. அது நான் அல்ல. நான் ஒரு மனிதன் அவ்வளவுதான். அங்கே அமர்ந்திருக்கும், ஐயா. தேவன் உங்களை அந்த வயிற்று கோளாறிலிருந்து சுகப்படுத்தினார் என்று விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், அங்கே சிகப்பு சட்டை அணிந்து அமர்ந்திருப்பவரே, இப்பொழுது நீங்கள் வீட்டுக்குச் சென்று நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை சாப்பிடுங்கள். உம்முடைய விசுவாசம் உன்னை சுகப்படுத்தினது. அது எப்படி நடந்திருக்கும் என்று நீங்கள் உணராமலிருந்தீர்கள். ஐயா, நீங்க அது வயிற்றுப் புண்ணாயிருக்கும் என்று நினைத்தீர்கள்.ஆனால் அது புற்றுநோய், காரணம் இங்கே நின்று கொண்டிருக்கும் இந்த ஸ்திரீயும் புற்றுநோயினால் அவதிப்படுகிறார்கள். எனவே அது அங்கிருந்துதான் உன்னிடத்தில் இழுக்கப்பட்டது. 78.உனக்கு புற்றுநோய் இருக்கிறது, அது உன் மார்பகத்திலிருக்கும் ஒரு வளர்ச்சியாக இருக்கிறது. அது பரவக் கூடியது என்று மருத்துவர் உன்னிடத்தில் கூறியிருக்கிறார். அது உன் இடது மார்பகத்தில் இருக்கிறது. அது சரிதானே? இப்பொழுது நீ சுகமடையப் போகிறாய் என்பதை விசுவாசிக்கிறாயா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அது உனக்கு அப்படியே ஆகக்கடவது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசமுடையவராய் இருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும், உங்கள் முழு சிந்தையோடும் அதை விசுவாசியுங்கள். விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். அதை மாத்திரம் செய்யுங்கள். அதை மாத்திரம் செய்யும்படிக்கு தேவன் உன்னிடத்தில் கேட்கிறார். அது சரிதான், சகோதரனே. விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். இங்கே உட்கார்ந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மனிதன் மேலாக ஒரு ஆவி சுற்றிக் கொண்டிருக்கிறதை நான் பார்க்கிறேன். அது ஏதோ காரியம்.அங்கிருக்கும் இன்னொரு மனிதனிடத்திலும் அது போகிறது. அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் நடக்கிறது. நீங்கள் பழுத்த ரணம் (rupture) பிரச்சனையில் அவதிப்படுகிறீர்கள். அப்படித்தானே, ஐயா. ஆம் ஐயா. அங்கு இருக்கும் இன்னொரு நபரும் அவ்விதமே அவதிப்படுகிறார். அது சரிதானே? உங்கள் இருவருக்கும் குடற்புண் பிரச்சனை இருக்கிறது. அது சரியென்றால் உங்கள் கரங்களை உயர்த்திக் காட்டுங்கள். இங்கிருக்கும் இந்த இரண்டு பேரும், இதை கவனியுங்கள். இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் இதை விசுவாசியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓ, இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது நீங்கள் விசுவாசித்தே ஆகவேண்டும். 79.நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். அப்படியில்லையா? சீமாட்டியே? எனக்கு உங்களைப் பற்றி தெரியாது. ஆனால் உங்களைப் பற்றி அறிந்த ஒருவர் இங்கே இருக்கிறார். அது நம்முடைய பரலோக பிதா. உங்களைப் பற்றி முழுவதும் அவருக்குத் தெரியும். நீங்கள் நரம்புத்தளர்ச்சி கோளாறினால் அவதிப்படுகிறீர்கள் அதற்காக மட்டும் நீங்கள் இங்கே வரவில்லை. உங்களுக்கு இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. நீங்கள் இங்கே வந்திருப்பதற்கான முக்கியமான காரியம். அது இன்னொருவருக்காக வந்திருக்கிறீர்கள். அது பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுடைய ஒரு வாலிபப் பையன். அந்த பையனுக்கும் நரம்புத்தளர்ச்சி பிரச்சனை இருக்கிறது. நீங்கள் ஒரு மருத்துவரிடத்தில் போவதை நான் பார்க்கிறேன். அவர் ஏதோ ஒரு விதமான காரியத்தை செய்கிறார்... ஓ, அது, அந்த பையனுக்கு அவர் மின்சார அதிர்வு சிகிச்சை அளிக்கிறார். அவன், ஒரு விதமான நரம்புத்தளர்ச்சி அல்லது ஏதோ தொல்லையினால் அவதிப்படுகிறான். அவன் கட்டுப்பாடானவன். மக்கள் அதிகமாக இருக்கிற இடங்களில் அவன் போக விரும்பமாட்டான். அவன் ஒரு கிறிஸ்தவன். ஆனால் பிசாசு அவனை கட்டி வைத்திருக்கிறான். அவன் சபைக்கு வருவதற்கு பயப்படுகிறான். நீங்கள் சுகமானீர்கள், அவனும் சுகத்தை பெற்றுக் கொள்ளும்படிக்கு நீங்கள் போய் அவனை இப்பொழுது அழைத்து வாருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசமுடையவர்களாய் இருங்கள். சந்தேகிக்க வேண்டாம். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை முற்றிலும் சுகப்படுத்துவார். 80.(கூட்டத்தார் மத்தியிலிருந்து ஒரு மனிதன் பேசுகிறார் ஆனால் சகோதரன் பிரான்ஹாமோ ஜெப வரிசையில் வந்த நபருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்) ஐயா, உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எவ்வளவு நாட்களாக நீங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்கள்? நீண்ட நாட்களாகவா? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? எனக்கு உங்களைப் பற்றி தெரியாது. தேவன் உங்களை அறிவார். நாம் இருவரும் இதுதான் முதல்தடவையாக சந்திக்கிறோம் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் உங்களைப் பற்றி முழுவதும் அறிந்திருக்கிறார். உங்களைக் குறித்து ஏதோ காரியம் விநோதமாயிருக்கிறது, ஐயா. தயவு செய்து கூட்டத்தார் பயபக்தியுடன் இருங்கள். கூட்டத்தை இடையூறு செய்ய வேண்டாம். பயபக்தியுடன் இருங்கள். நீங்கள் வீட்டுக்குச் சென்று, உங்களுக்கு விருப்பமானதை சாப்பிடுங்கள். உங்களுக்கு இருக்கிற வயிற்று கோளாறை கர்த்தராகிய இயேசு சுகப்படுத்தினார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசியுங்கள். தேவனிடத்தில் விசுவாச முடையவர்களாய் இருங்கள். 81.ஐயா, உங்களைச் சுற்றிலும் ஒரு விநோதமான காரியம் இருப்பதை தொடர்ந்து நான் பார்க்கிறேன். அது என்னவென்று என்னால் கூறமுடியவில்லை. ஒரு நிமிடம் ஓ, அது ஒரு சுவர். அது ஒரு இடம். ஓ நீங்கள் இந்த இடத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். அது நீங்கள் வசிக்குமிடம் உங்களுடைய இடத்தில் எங்கேயோ இருக்கும் ஒரு (சீர்திருத்த சிறை) (penitentiary) அல்லது வேறு ஏதோவொன்றாயிருக்கிறது. அது இந்தியானாவிலிருக்கும் மிச்சிகன் பட்டணம். நீங்கள் ஒரு காரணத்தின் நிமித்தம் நீங்கள் மனம் தளர்ந்திருக்கிறீர்கள் மற்றும் உங்களுடைய மனைவியும் நிலைகுலைந்து இருக்கிறார்கள். அது ஒரு வயதான சீமாட்டியை குறித்ததாயிருக்கிறது. அவர்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்கள். அவர் உங்களுடைய மனைவியின் தாயும், உங்களுடைய மாமியார் ஆகும். நீங்கள் ஒரு பிரசங்கியாரும் கூட உங்களுடைய பெயர் சங்கை. மேக்கென்னி (Reverend Mckinney). அது சரிதான். அது சரிதானே? சகோதரனே, இப்பொழுது இந்த பிரச்சனைகள் யாவும் சரியாகிவிடும். சர்வவல்லமையுள்ள தேவனே, ஜீவனின் ஆக்கியோனே, இப்பொழுது இந்த மனிதனின் மேலாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஆசீர்வாதங்களை அனுப்பியருளும். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனே... இரக்கமாயிரும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் மேல் விசுவாசமுடைய வர்களாயிருங்கள். 82.ஐயா, உங்களை கூர்ந்து கவனிக்கும்போது, உங்களுக்கு இருதயத்தில் ஏதோ தொல்லை இருக்கிறது. இல்லையா? மற்றும் அது உங்களுடைய நண்பன், அவருக்கும் புற்றுநோய் இருக்கிறது, இல்லையா? உங்களுக்கு ஒரு சிறிய பெண் இருக்கிறாள். அவள் மீதும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். அவளுக்கு இளம்பிள்ளைவாதம் (Polio) இருக்கிறது. அப்படி அவளுக்கு இல்லையா? அது உண்மையாயிருக்கும் பட்சத்தில், எழுந்து நில்லுங்கள். ஓ, தேவனே இங்கிருக்கும் எங்களுடைய நண்பர், இன்னொருவருக்காகவும் வந்திருக்கும் இவர் மீது கிருபையாயிரும். ''நீங்கள் வாஞ்சிக்கிற எந்தவொரு காரியத்தையும், அதை ஜெபத்தில் கேட்கும்போது, அதை பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியங்கள். அப்பொழுது அது உங்களுக்கு கொடுக்கப்படும்", என்று நீர் வாக்களித்துள்ள உம்முடைய வார்த்தையின்படியே இவருடைய வாஞ்சை இவருக்கு அருளப்படுவதாக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென். என்னுடைய சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 83.(கர்த்தருடைய) தூதனாகிய, அந்த வெளிச்சம் உடனடியாக இங்கே பின்னாக இருக்கிற யாரோ ஒருவரிடத்தில் சென்றிருக்கிறது. ஆனால் அது அங்கு உட்கார்ந்திருக்கும் என்னுடைய நண்பர் சகோதரன். ஃப்ளனகார் (Brother Flanagor) என்று நினைக்கிறேன். அவரை தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அது அவர் தான் என்று விசுவாசிக்கிறேன். ஒரு வேளை அதுவே என்னுடைய கவனத்தை ஈர்த்திருக்கலாம். நான் என் சுயநினைவுடன் தான் இருக்கிறேன், ஆனால் அது அங்கேயே இருப்பதுபோல நினைக்கிறேன். அங்கே அமர்ந்திருக்கிற சீமாட்டிக்கு கீல்வாதம் (மூட்டுகளில் ஏற்படும் வலியும் விறைப்புத் தன்மையும்) இருக்கிறது. அப்படியில்லையா, சீமாட்டியே? அதற்காகத்தான் அவள் இங்கே வந்திருக்கிறாள். கீல்வாதத்தினால் அவதிப்படுகிற உனக்கு அது (சுகம்) கொடுக்கப்படுகிறது. அங்கே உங்களுக்கு அடுத்ததாக அமர்ந்திருக்கிற அந்த சீமாட்டியும் தேவையில் இருக்கிறாள். அவளுக்கு இடுப்பில் ஏதோ தொல்லை இருக்கிறது. அது உண்மை இல்லையா? உங்களுக்கு குடலழற்சி(Colitis) இருக்கிறது, இல்லையா? அது உண்மை இல்லையா? இயேசு உங்களை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கரத்தை உங்கள் நண்பர் மேலாக வையுங்கள். நீங்களும் உங்கள் கரங்களை ஒருவருக்கொருவர் மேலாக வையுங்கள். சர்வவல்லமையுள்ள தேவனே, ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நல்ல ஈவையும் அளிப்பவரே‚ இந்த ஊழியக்காரிகள் மீதாக உம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்பும், தேவனே. அவர்கள் சுகத்தை பெற்றுக் கொள்ளும்படிக்கு அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சையை அவர்களுக்கு தந்தருளும்‚ இதை உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நான் கேட்கிறேன். ஆமென். 84.சரிதான், அந்த வியாதியஸ்தரை இங்கே கொண்டு வாருங்கள். சீமாட்டியே, வாருங்கள். சரிதான். அந்த குழந்தைக்காக நீங்கள் என்னை ஒரு நிமிடம் நோக்கி பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு நபர். அது அப்படியில்லையா?அப்படியானால் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? சீமாட்டியே? சரிதான். நீங்கள் உங்களுக்காக இங்கே வரவில்லை. இது உங்களுடைய குழந்தை இல்லை. நீங்கள் இந்த குழந்தையை பராமரித்து வருகிறீர்கள். ஆனால் நீங்கள் முன் கழுத்து கழலை (Goiter) பிரச்சனையினால் இங்கே வந்திருக்கிறீர்கள். இந்த குழந்தைக்கு ஒரு சிறிய சகோதரர் உண்டு, இந்த சகோதரி மூத்தவள், இவளுக்கு சரியான கண்கள் இல்லை. இந்த பிள்ளைகளின் தாயார் ஒரு கத்தோலிக்கர். அவள், இந்த பிள்ளைகள் சுகமடைவார்களானால் அவள் ஒரு விசுவாசியாக மாறுவேன் என்று இங்கே வருவதற்கு முன் உங்களிடத்தில் கூறினாள். 85.நாம் தலைகளை தாழ்த்துவோமாக. சர்வவல்லமையுள்ள தேவனே‚ நித்திய ஜீவனின் ஆக்கியோனே‚ ஒவ்வொரு நல்ல ஈவையும் அளிப்பவரே‚ இந்த பிள்ளையின் மீதாக உம்முடைய ஆசீர்வாதத்தை அனுப்பும். சுகத்தை கொடுத்தருளும்‚ மரணத்திலிருந்து இயேசு கிறிஸ்துவை எழுப்பின உம்முடைய வல்லமை இந்த குழந்தையையும் இப்பொழுது உயிர்ப்பிப்பதாக. உம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலம் இதை அளியும் பிதாவே என்று நான் கேட்கிறேன். நம்முடைய தலைகள் தாழ்த்தியிருக்கும்போது, ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். தயவுசெய்து ஒவ்வொருவரும் கண்களை மூடி, ஒவ்வொருவரும் தலைகளை தாழ்த்தி இந்த குழந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இரக்கத்தின் தேவனே, இந்த சிறு பிள்ளையின் மீதாக உம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்பி, சுகப்படுத்தும்படிக்கு இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது, உன்னுடைய தலையை உயர்த்துவாயாக. அன்பே, இங்கே பார். தலையை உயர்த்தி இங்கே இருக்கும் சகோதரன். பிரான்ஹாமை பார். இந்த பிள்ளை ஓரக்கண் பார்வையுடையவள். இப்பொழுது, தேனே, இந்த வழியில் இங்கே பார். இப்பொழுது, இங்கே பின் பக்கமாக இந்த வழியில் பார். இங்கே இருக்கும் என்னை நோக்கிப் பார். இப்பொழுது உங்களுக்கு இருக்கிறது போல இவளுடைய கண்கள் நேராகிவிட்டது. சரிதான். இதை எடுத்துக்கொண்டு, உன்னுடைய தாயினிடத்தில் சென்று அது... என்று சொல். 86.கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று நாம் சொல்லுவோமாக. (சபையார், ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லுகின்றனர்) பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக. பரலோகத்தில் உம்முடைய சித்தம் செய்யப்படுவது போல, பூமியிலேயும் உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக. அதனோடு கூட உம்முடைய கிருபை இருப்பதாக. நீரே தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று மக்கள் அறிந்து கொள்ளும்படிக்கு மக்கள் மத்தியில் அடையாளங்களையும், அற்புதங்களையும், அதிசயங்களையும், செய்து அசைவாடுவீராக. எங்கள் கர்த்தராகிய இயேசுவின் மூலம் இந்த ஆசீர்வாதங்களை அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். இந்த சீமாட்டி கிட்டத்தட்ட குருடாயிருக்கிறாள். இயேசுகிறிஸ்துவை தவிர அவளுக்கு வேறு நம்பிக்கை இல்லை. நீங்கள் விசுவாசத்தோடு வந்திருக்கிறீர்கள். நாம் ஜெபம் செய்வோமாக. அன்புள்ள ஜீவாதிபதியே, இதோ என் சகோதரிக்கு இரங்கும்படிக்கு நான் ஜெபிக்கிறேன். ஏனெனில் இவளுடைய பூர்வீக தகப்பனார் நீர் மலைமீது உம்முடைய சிலுவை சுமந்து செல்லும்படிக்கு உமக்கு உதவினார். இதோ இருளில் தட்டுத்தடுமாறி போகிற அவருடைய மகள் இன்றிரவு இங்கே இருக்கிறாள். இரக்கமுள்ள பிதாவே, இவளை சுகப்படுத்தும், அப்படி செய்வீரா, கர்த்தாவே? பிசாசுகள் மீதாக எங்களுக்கு நீர் வல்லமையை கொடுத்திருக்கிறீர். அதை நீர் எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். நான் உம்மை விசுவாசிக்கிறேன் மற்றும் எனக்குள் இருக்கிற ஒவ்வொரு தசை நாரும் அதை விசுவாசிக்கிறது. கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் அவருடைய வழியை எடுத்துக் கொள்ளும்படிக்கு இப்பொழுது எங்கள் இருவரையும் பெலப்படுத்தும். என்னுடைய சகோதரியை பார்க்கக் கூடாதபடிக்கு செய்யும் இந்த குருட்டு ஆவியை இவளை விட்டு போகும்படிக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கடிந்துகொள்கிறேன். இந்த சமயத்தில் ஜனத்தார் தங்கள் தலைகளை தாழ்த்தியிருக்கட்டும். 87.இப்பொழுது, நீங்கள் என்னைப் பார்க்கும்படிக்கு உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுதுதான் அது கடந்து போனது, அப்படியில்லையா? என்னுடைய முகத்தை பாருங்கள். உங்களுடைய விரலை கொண்டு என்னுடைய மூக்கைத் தொடுங்கள். அது சரி. உன்னுடைய கண், பார்வையை பெற்றுக் கொண்டது. கூட்டத்தாரே நீங்கள் உங்கள் தலையை உயர்த்தலாம். இப்பொழுது என்னுடைய மூக்கை தொடும்படிக்கு அவளிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதை செய்யுங்கள், உங்களால் முடியுமா, சீமாட்டியே? சந்தோஷத்தோடே நீங்கள் புறப்பட்டு செல்லுங்கள். சகோதரியே, நீங்கள் சுகமானீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு இருக்கிற சர்க்கரை வியாதியை தேவன் நீக்கி, உங்களை சுகப்படுத்த முடியும் என்று விசுவாசியுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சந்தோஷத்தோடே, 'அவருடைய கிருபைக்காக கர்த்தருக்கு நன்றி' என்று சொல்லிக் கொண்டே நீங்கள் புறப்பட்டு செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் வீட்டுக்கு சென்று உங்கள் இரவு ஆகாரத்தை புசிக்கும்படிக்கு தேவனால் அந்த வயிற்று பிரச்சனையை உங்களிலிருந்து எடுத்துப் போட முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவரால் முடியும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 88.சிறுநீரக பிரச்சனையை சுகப்படுத்துவது தேவனுக்கு அது ஒரு பெரிய காரியமல்ல. அவரால் அதை முழுவதும் சுகப்படுத்த முடியும். உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறீர்களா? இங்கே வாருங்கள். பிதாவே, உம்முடைய குமாரனாகிய, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் எங்கள் சகோதரியை சுகப்படுத்தும். ஆமென். சந்தேகிக்க வேண்டாம். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள். சற்று பொறுங்கள். ஏதோ காரியம் என் முன்பாக தோன்றுகிறது, அது ஒரு கட்டிடம். இப்பொழுது, ஒவ்வொருவரும் பயபக்தியுடன் இருங்கள். நம்முடைய பரலோகபிதா ஏதோ காரியத்தை பேசுகிறார். நான் ஒரு கட்டிடத்தை பார்க்கிறேன். அது எனக்கு முன்பாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த கட்டிடம் ஒரு பட்டணத்தில் இருக்கிறது. அந்த பட்டணம் ஒரு பள்ளத்தாக்கில் இருக்கிறது. அங்கே மேலே உயர்ந்த கூம்பு கோபுரம் இருக்கிறது, உயர்ந்த கட்டிடங்கள் உள்ள இடம். அவ்விதமாக (தரிசனமானது) போய்க் கொண்டிருக்கிறது. அது இப்பொழுது நகர்ந்து கொண்டிருக்கிறது. அது அப்படியாக ஒரு மூலைக்கு வருகிறது. அது ஒரு ஸ்திரீயாயிருக்கிறது. அவளுக்கு நேசமானவர்கள் அவளை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். அது மேயோ சகோதரர்கள் மருத்துவமனை (Mayo Brothers Clinic). அந்த ஸ்திரீ மிச்சிகனிலிருந்து வருகிறாள். அவளை சோதிக்கும்படிக்கு மருத்துவமனைக்குள் கொண்டு செல்கிறார்கள். ஆனால் அவளுடைய பிரச்சனை என்னவென்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது மூளை சம்பந்தப்பட்ட நோய். அப்படிப்பட்ட யாரோ ஒருவர் இங்கே இருக்கிறார். இங்கே எங்கேயோ உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அது மிகவும் கனமான ஸ்திரீ. ஓ, அவள் எங்கே இருக்கிறாள்? அதோ அங்கே தூக்குகட்டிலில் (Stretcher) படுத்து கிடக்கும் சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நீங்கள் தான். நீங்கள் எழுந்து நில்லுங்கள். உங்கள் படுக்கையை எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு செல்லுங்கள், நீங்கள் சுகமானீர்கள். நாம் எல்லோரும் எழுந்து நிற்போமாக, ஒவ்வொருவரும். சர்வவல்லமையுள்ள தேவனே, ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நல்ல ஈவையும் அளிப்பவரே, இந்த மக்களை ஆசீர்வதியும். 2